கிரிக்கெட்

ராகுல் டிராவிட்டுக்கு இன்று பிறந்த நாள் : ரசிகர்கள் வாழ்த்து + "||" + Happy Birthday Rahul Dravid: Wishes pour in as The Wall' turns 47

ராகுல் டிராவிட்டுக்கு இன்று பிறந்த நாள் : ரசிகர்கள் வாழ்த்து

ராகுல் டிராவிட்டுக்கு இன்று பிறந்த நாள் : ரசிகர்கள் வாழ்த்து
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ராகுல் டிராவிட் இன்று 47-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.
பெங்களுரூ,

இந்திய கிரிக்கெட் அணியின் சுவர் என்று வர்ணிக்கப்பட்டும் முன்னாள் கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட் இன்று தனது 47-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். ராகுல் டிராவிட்டுக்கு கிரிக்கெட் வீரர்களும், அவரது ரசிகர்களும் டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.  வி.வி.எஸ். லக்ஷ்மன், ஹர்பஜன் சிங் மற்றும் பிரபல வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே உள்ளிட்டோரும் ராகுல் டிராவிட்டுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். 

1973- ஆம் ஆண்டு மத்திய பிரதேசத்தில் பிறந்த ராகுல் டிராவிட் இந்திய அணிக்காக 509 சர்வதேச போட்டிகள் விளையாடியுள்ளார். அர்ஜூனா விருது, ஐசிசி சிறந்த வீரர் (2004) பத்ம ஸ்ரீ (2004), பத்ம பூஷன் (2013) ஆகிய விருதுகளையும் ராகுல் டிராவிட் பெற்றுள்ளார்.

ராகுல் டிராவிட் பிறந்த நாள் தொடர்பான பதிவுகள் டுவிட்டர் டிரெண்டிங்கில் முன்னிலை வகிக்கின்றன.  19 வயதுக்கு உட்பட்டோருக்கான இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்த ராகுல் டிராவிட், தற்போது தேசிய கிரிக்கெட் அகடமியின் தலைவராக உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. இலங்கை, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கிரிக்கெட்: இந்திய அணியில் மீண்டும் பும்ரா, தவான்
காயத்தால் ஓய்வில் இருந்த பும்ராவும், ஷிகர் தவானும், இலங்கை, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடருக்குரிய இந்திய அணிக்கு திரும்பியுள்ளனர்.
2. ஜூனியர் பெண்கள் ஆக்கி: இந்திய அணியிடம் நியூசிலாந்து தோல்வி
ஜூனியர் பெண்கள் ஆக்கி போட்டியில், இந்திய அணியிடம் நியூசிலாந்து தோல்வியை தழுவியது.
3. ஆஸ்திரேலிய தொடரில் இந்திய அணி 2 பகல்-இரவு டெஸ்ட் போட்டியில் விளையாடுமா? - கங்குலி பதில்
ஆஸ்திரேலிய தொடரில் இந்திய அணி 2 பகல்-இரவு டெஸ்ட் போட்டியில் விளையாடுமா? என்பதற்கு கங்குலி பதிலளித்தார்.
4. பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட்: இந்திய அணி அபார வெற்றி
வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய பெண்கள் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
5. இரட்டை ஆதாய பதவி விவகாரம்: ராகுல் டிராவிட் நேரில் ஆஜராக நோட்டீஸ்
பெங்களூவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் சமீபத்தில் நியமனம் செய்யப்பட்டார்.