கிரிக்கெட்

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்: இந்திய பெண்கள் அணி அறிவிப்பு + "||" + Over 20 World Cup Cricket: Indian women's team announced

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்: இந்திய பெண்கள் அணி அறிவிப்பு

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்: இந்திய பெண்கள் அணி அறிவிப்பு
பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியில் புதுமுக வீராங்கனை ரிச்சா கோஷ் சேர்க்கப்பட்டுள்ளார்.
மும்பை,

7-வது பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் அடுத்த மாதம் (பிப்ரவரி) 21-ந்தேதி தொடங்கி மார்ச் 8-ந்தேதி வரை நடக்கிறது. இதில் பங்கேற்கும் 10 அணிகள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் 4 முறை சாம்பியனான ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. இந்திய அணி 20 ஓவர் உலககோப்பையை இதுவரை வென்றதில்லை. மூன்று முறை அரைஇறுதிவரை வந்திருக்கிறது.


20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கான இந்திய அணி மும்பையில் நேற்று அறிவிக்கப்பட்டது. ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணியில் ஒரே ஒரு புதுமுகமாக பெங்கால் பேட்ஸ்மேன் 16 வயதான ரிச்சா கோஷ் சேர்க்கப்பட்டு உள்ளார். சமீபத்தில் நடந்த பெண்கள் சேலஞ்சர் கோப்பை கிரிக்கெட்டில் ரிச்சா கோாஷ் 26 பந்துகளில் 36 ரன்கள் எடுத்தார். சிறப்பாக விளையாடியதன் பலன் உலக கோப்பை அணிக்கு தேர்வாகி இருக்கிறார். அரியானாவைச் சேர்ந்த பள்ளி மாணவி 15 வயதான ஷபாலி வர்மா சர்வதேச அளவிலான போட்டிகளில் கலக்கி வருவதால் எதிர்பார்த்தது போலவே இடம் கிடைத்துள்ளது.

உலக கோப்பை போட்டிக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி வருமாறு:-

ஹர்மன்பிரீத் கவுர் (கேப்டன்), ஸ்மிரிதி மந்தனா (துணை கேப்டன்) ஷபாலி வர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஹர்லீன் தியோல், தீப்தி ஷர்மா, வேதா கிருஷ்ணமூர்த்தி, ரிச்சா கோஷ், தானியா பாட்டியா, பூனம் யாதவ், ராதா யாதவ், ராஜேஷ்வரி கெய்க்வாட், ஷிகா பாண்டே, பூஜா வஸ்ட்ராகர், அருந்ததி ரெட்டி.

உலக கோப்பை போட்டிக்கு முன்பாக ஜனவரி 31-ந்தேதி தொடங்கும் முத்தரப்பு தொடரிலும் இந்திய அணி கலந்து கொள்கிறது. ஆஸ்திரேலியா, இங்கிலாந்து இந்த போட்டியில் களம் காணும் மற்ற இரு அணிகளாகும். இந்த தொடருக்கான இந்திய அணியும் அறிவிக்கப்பட்டது. மேற்கண்ட 15 வீராங்கனைகளுடன் கூடுதலாக அணியில் நுஜாத் பர்வீன் சேர்க்கப்பட்டு இருக்கிறார்.

உலக கோப்பை அணி குறித்து இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் கூறுகையில், ‘ரிச்சா கோஷ், சேலஞ்சர் கோப்பை மற்றும் உள்ளூர் போட்டிகளில் நன்றாக ஆடியதால் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். உலக கோப்பை போட்டிக்கு முன்பாக நடக்கும் முத்தரப்பு தொடர் களத்தில் எங்களது திட்டமிடலை செயல்படுத்தி, சிறந்த லெவன் அணியை அடையாளம் காண உதவிகரமாக இருக்கும். ஆஸ்திரேலியாவில் பெண்கள் பிக்பாஷ் கிரிக்கெட்டில் விளையாடிய அனுபவம் இந்த உலக கோப்பையில் சாதகமாக இருக்கும் என்று நம்புகிறேன். இங்குள்ள ஆடுகளங்கள், சீதோஷ்ண நிலை எப்படி என்பதை அறிவோம். அது எங்களுக்கு கூடுதல் உத்வேகம் அளிக்கிறது. எங்களது பிரதான பலமே சுழற்பந்து வீச்சு (4 சுழற்பந்து வீச்சாளர்கள் அணியில் உள்ளனர்) தான். அதை சரியாக பயன்படுத்திக் கொள்வதில் கவனம் செலுத்துவோம்.’ என்றார்.

தொடர்புடைய செய்திகள்

1. 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் அரைஇறுதிக்கு முன்னேறும் அணிகள் - கில்கிறிஸ்ட் கணிப்பு
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் அரைஇறுதிக்கு முன்னேறும் அணிகளை கில்கிறிஸ்ட் கணித்துள்ளார்.