கிரிக்கெட்

நியூசிலாந்துக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்: இந்திய அணியில் சஞ்சு சாம்சன் நீக்கம் + "||" + 20 over cricket against New Zealand: Sanju Samson dismissed from Indian squad

நியூசிலாந்துக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்: இந்திய அணியில் சஞ்சு சாம்சன் நீக்கம்

நியூசிலாந்துக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்: இந்திய அணியில் சஞ்சு சாம்சன் நீக்கம்
நியூசிலாந்துக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியில் இருந்து சஞ்சு சாம்சன் நீக்கப்பட்டுள்ளார்.
மும்பை,

இந்திய கிரிக்கெட் அணி விரைவில் நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து 20 ஓவர் போட்டி, மூன்று ஒரு நாள் மற்றும் இரண்டு டெஸ்டுகளில் விளையாட உள்ளது. இந்தியா-நியூசிலாந்து இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி வருகிற 24-ந்தேதி ஆக்லாந்தில் நடக்கிறது.


நியூசிலாந்துக்கு எதிரான 20 ஓவர் தொடரில் ஆடும் இந்திய அணி நேற்றிரவு அறிவிக்கப்பட்டது. இலங்கைக்கு எதிரான 20 ஓவர் தொடரில் கடைசி ஆட்டத்தில் களம் இறங்கி 6 ரன் எடுத்த விக்கெட் கீப்பர் கேரளாவைச் சேர்ந்த சஞ்சு சாம்சன் கழற்றி விடப்பட்டார். இலங்கை போட்டிகளுக்கு ஓய்வு அளிக்கப்பட்டிருந்த ரோகித் சர்மா, முகமது ஷமி அணிக்கு திரும்புகிறார்கள். ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா காயத்தில் இருந்து முழுமையாக மீளாததால் அவரது பெயர் பரிசீலிக்கப்படவில்லை.

இந்திய 20 ஓவர் அணி வருமாறு:-

விராட் கோலி (கேப்டன்), ரோகித் சர்மா (துணை கேப்டன்), லோகேஷ் ராகுல், ஷிகர் தவான், ஸ்ரேயாஸ் அய்யர், ரிஷாப் பண்ட், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், மனிஷ் பாண்டே, ஷிவம் துபே, ஜஸ்பிரித் பும்ரா, ஷர்துல் தாகூர், நவ்தீப் சைனி, வாஷிங்டன் சுந்தர், ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி.

நியூசிலாந்துக்கு எதிரான ஒரு நாள் மற்றும் டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி தேர்வு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. நியூசிலாந்து மசூதிகளில் 51 பேர் சுட்டுக்கொலை: பயங்கரவாதிக்கு சாகும்வரை சிறைத்தண்டனை - வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு
நியூசிலாந்து மசூதிகளில் 51 பேரை சுட்டுக்கொன்ற பயங்கரவாதிக்கு சாகும்வரை சிறைத்தண்டனை விதித்து, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை அந்த நாட்டு கோர்ட்டு நேற்று வழங்கியது.
2. 2 மசூதிகளில் தொழுகையின் போது தாக்குதல் நடத்தியவனுக்கு நியூசிலாந்தின் அதிகபட்ச தண்டனை
நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் நகரில் 2 மசூதிகளில் தொழுகையில் இருந்த 51 பேரை கொன்று குவித்த பிரென்டன் டாரண்டுக்கு பரோல் இல்லாத ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
3. மீண்டும் அச்சுறுத்தும் கொரோனா: நியூசிலாந்தில் பொதுத்தேர்தல் தள்ளிவைப்பு
செப்.19 ஆம் தேதி நடைபெற இருந்த நியூசிலாந்து பொதுத்தேர்தல் கொரோனா அச்சம் காரணமாக தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
4. நியூசிலாந்தில் மீண்டும் வைரஸ் பரவியது எப்படி? - 102 நாட்களுக்குப் பிறகு கொரோனா தொற்று உறுதி
நியூசிலாந்தில் 102 நாட்களுக்கு பிறகு 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் நாட்டில் மீண்டும் வைரஸ் பரவியது எப்படி என்பது குறித்து அந்த நாட்டு அரசு தீவிரமாக ஆராய்ந்து வருகிறது.
5. நியூசிலாந்துக்கு சென்று விளையாட தயாராகும் 4 அணிகள்
நியூசிலாந்துக்கு சென்று 4 அணிகள் விளையாட சம்மதம் தெரிவித்துள்ளன.