கிரிக்கெட்

2 இஞ்ச் தூரத்தை நான் டைவ் அடித்து கடந்திருக்க வேண்டும்... -ரன் அவுட் ஆனது குறித்து தோனி உருக்கம்! + "||" + Should have dived: MS Dhoni says he regrets his run-out during 2019 World Cup semis defeat to NZ

2 இஞ்ச் தூரத்தை நான் டைவ் அடித்து கடந்திருக்க வேண்டும்... -ரன் அவுட் ஆனது குறித்து தோனி உருக்கம்!

2 இஞ்ச் தூரத்தை நான் டைவ் அடித்து கடந்திருக்க வேண்டும்... -ரன் அவுட் ஆனது குறித்து தோனி உருக்கம்!
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் ரன் அவுட்டிலிருந்து தப்பிக்க தான் டைவ் அடித்திருக்க வேண்டும் என்று எம்.எஸ்.தோனி வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி

உலகக்கோப்பை அரையிறுதியில் தோனியின் ரன் அவுட், இந்தியாவின் கோப்பை கனவை கானல் நீராக்கியது. இதுவரை இதுகுறித்து மவுனம் காத்த தோனி, 'அந்த இரண்டு இன்ச் தூரத்தை கடக்க  நான் டைவ் அடித்திருக்க வேண்டும் என எனக்குள்ளே சொல்லிக் கொண்டே இருக்கிறேன்' என தெரிவித்துள்ளார்.

2019-ம் ஆண்டு உலகக்கோப்பை தொடரின் அரையிறுதி போட்டியில்  நியூசிலாந்து அணியை இந்திய அணி எதிர்கொண்டது. அதில் 2-வது  இன்னிங்சில் முன் வரிசை வீரர்கள் சொதப்ப, ஜடேஜாவுடன் ஜோடி சேர்ந்த தோனி, வெற்றி வாய்ப்பை பிரகாசப்படுத்தினார். கடைசி கட்டத்தில் ஜடேஜா அவுட் ஆக தோனியின் தோளில் முழு சுமையும் விழுந்தது. அதற்கு ஏற்றாற்போல 49 ஓவரின் முதல் பந்தில் சிக்சர் அடித்த தோனி, 3-வது பந்தில் இரண்டு ரன்னுக்காக ஓடிய போது குப்தில் வீசிய துல்லிய த்ரோவில், ரன் அவுட் ஆனார். 240 ரன்களை இலக்காக கொண்டு ஆடிய இந்திய அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

அந்த ரன் அவுட் குறித்து தோனி தற்போது கருத்து தெரிவித்துள்ளார். ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், தமது முதல் போட்டியிலும் ரன் அவுட் ஆனதாகவும், நியூசிலாந்துக்கு எதிரான உலகக்கோப்பை அரையிறுதி போட்டியிலும் ரன் அவுட் ஆனதாகவும் தோனி தெரிவித்துள்ளார். அந்த போட்டியில் தாம் ஏன் டைவ் அடிக்கவில்லை என்று இப்போதும் யோசித்து கொண்டே இருப்பதாக தோனி கூறினார்.

அவர் அளித்த பேட்டியில் கூறி இருப்பதாவது:-

அந்த இரண்டு இஞ்ச் தூரத்தை நான் டைவ் அடித்து கடந்திருக்க வேண்டும். இதனை எனக்குள் சொல்லிக் கொண்டே இருக்கிறேன். நான் ஏன் டைவ் அடிக்கவில்லை என எனக்குள் கேட்டுக் கொண்டே இருக்கிறேன். எனது முதல் ஒருநாள் போட்டியில் ரன் அவுட் ஆனேன். நியூசி., அணியுடனான அரையிறுதியிலும் ரன் அவுட் ஆனேன் இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

சமீபத்தில் பேட்டி அளித்த இந்திய அணி பயிற்சியாளர் ரவி சாஸ்திரி , 'ஒருநாள் போட்டிகளிலிருந்து தோனி விரைவில் ஓய்வு பெறலாம். டுவென்டி-20 போட்டிகளில் மட்டுமே தொடர்ந்து விளையாட அவர் விரும்பலாம். ஐ.பி.எல்., போட்டிகளில் அவர் சிறப்பாக செயல்பட்டால், ஆஸ்திரேலியாவில் நடக்கவுள்ள டுவென்டி-20 உலகக்கோப்பையில் (அக். 18- நவ. 15) விளையாட வாய்ப்புள்ளது என தெரிவித்திருந்தார்.

ஒருவேளை தோனி, டுவென்டி-20 போட்டிகளில் மட்டும் விளையாட முடிவு எடுத்தால், நியூசி., அணிக்கு எதிரான உலகக்கோப்பை அரையிறுதி போட்டியே, அவரது கடைசி ஒருநாள் போட்டியாக இருக்கும். ஐ.பி.எல்., போட்டிகளில் தன்னை நிரூபித்து உலக கோப்பை டுவென்டி-20 அணியில் இடம் பெற்று,  அத்துடன் தனது ஓய்வு அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. இரு நாடுகளும் வெங்காயம்,தக்காளி வர்த்தகம் செய்ய முடியும் என்றால் ஏன் கிரிக்கெட் விளையாடக்கூடாது -சோயிப் அக்தர்
இரு நாடுகளும் வெங்காயம், தக்காளி வர்த்தகம் செய்ய முடியும் என்றால் , ஏன் கிரிக்கெட் விளையாடக்கூடாது இருதரப்பு கிரிக்கெட் போட்டி குறித்து சோயிப் அக்தர் கேள்வி எழுப்பி உள்ளார்.
2. ஐ.பி.எல். அட்டவணை முழு விவரம் : முதல் ஆட்டத்தில் சென்னை-மும்பை அணிகள் மோதல்
8 அணிகள் பங்கேற்கும் 13-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடருக்கான போட்டி அட்டவணை முழு விவரம் வருமாறு:-
3. இந்தியாவுக்கு கிடைத்த மிகச்சிறந்த கேப்டன் டோனி தான்-சுரேஷ் ரெய்னா புகழாரம்
மகேந்திர சிங் டோனி தான் இந்தியாவுக்கு கிடைத்த சிறந்த கேப்டன் என்று தான் நம்புவதாக சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.
4. ஆஸ்திரேலிய வீராங்கனை சவாலை ஏற்று ஒரு ஓவர் பேட்டிங் செய்யும் சச்சின்
கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்றுவிட்ட சச்சின் தெண்டுல்கர், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீராங்கனை எல்லிஸ் பெர்ரியின் சவாலை ஏற்று, ஒரே ஒரு ஓவர் மட்டுமே ஆட உள்ளார்.
5. நியூசிலாந்து தொடரில் இருந்து இந்திய வீரர் ரோகித் சர்மா காயத்தால் விலகல்
நியூசிலாந்து தொடரில் இருந்து காயம் காரணமாக இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா விலகி இருக்கிறார்.