கிரிக்கெட்

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டி - ரிஷப் பண்ட் விலகல் + "||" + Against Australia 2nd ODI - Rishabh Bund deviation

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டி - ரிஷப் பண்ட் விலகல்

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டி - ரிஷப் பண்ட் விலகல்
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் காயம் காரணமாக இந்திய அணி வீரர் ரிஷப் பண்ட் விலகியுள்ளார்.
புதுடெல்லி,

ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் விளையாட இந்தியா வந்துள்ளது. முதல் போட்டி நேற்று  முன்தினம் மும்பையில் நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்றது.

முதலாவது  இந்திய அணி செய்தது. 6வது பேட்ஸ்மேனாக களமிறங்கிய ரிஷப் பண்ட், 33 பந்துகளில் 28 ரன்கள் எடுத்தார். அவர் பேட்டிங் செய்யும் போது, ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் வீசிய பந்து பண்ட்-ன் ஹெல்மெட்டில் அடித்தது. இதனால் அவர் லேசான காயம் அடைந்தார். 

பின்னர் ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்யும் போது, ரிஷப் பண்ட் கீப்பிங் செய்யவில்லை. அவருக்கு பதிலாக கே.எல்.ராகுல் கீப்பிங் செய்தார். 

இந்தநிலையில், 2வது ஒருநாள் போட்டியில் இருந்து ரிஷப் பண்ட் விலகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவரது மூளையில் அதிர்வு ஏற்பட்டிருப்பதால், அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட உள்ளதாக தெரிகிறது. சிகிச்சையில் ஏற்படும் முன்னேற்றத்திற்கு பிறகு, அவர் மூன்றாவது ஒருநாள் போட்டியில் பங்கேற்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரிஷப் பண்ட் விலகும் பட்சத்தில் அவருக்கு பதிலாக மணிஷ் பாண்டே அல்லது கேதர் ஜாதவ் இருவரில் ஒருவருக்கு வாய்ப்பு கொடுக்கப்படும் என தெரிகிறது.