கிரிக்கெட்

பாகிஸ்தானில் விளையாட வங்காள தேச கிரிக்கெட் அணி ஒப்புதல் + "||" + Bangladesh agree to full tour of Pakistan

பாகிஸ்தானில் விளையாட வங்காள தேச கிரிக்கெட் அணி ஒப்புதல்

பாகிஸ்தானில் விளையாட வங்காள தேச கிரிக்கெட் அணி ஒப்புதல்
பாகிஸ்தானில் விளையாட வங்காள தேச கிரிக்கெட் அணி ஒப்புதல் தெரிவித்துள்ளது.
தாகா,

வங்காள தேச கிரிக்கெட்  அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து  இரண்டு டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகள் கொண்ட  தொடரில் விளையாட உள்ளது.

முன்னதாக பாதுகாப்பு நிலைமை மோசமாக இருப்பதால் வங்காள தேச கிரிக்கெட் வீரர்கள் இந்த தொடருக்காக பாகிஸ்தானுக்கு செல்ல விரும்பவில்லை என்று தகவல் வெளியாகி இருந்தது.


இந்நிலையில் தற்போது பாகிஸ்தான் சென்று விளையாடுவதற்கு வங்காள தேச அணி ஒப்புதல் தெரிவித்துள்ளது. இதன்படி அங்கு நடக்க உள்ள போட்டிக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதில் ஜனவரி-  24, 25, 27  (மூன்று 'டுவென்டி-20') லாகூரில் நடக்க உள்ளன. மேலும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் முறையே பிப்ரவரி 7ம் தேதி முதல் 11ம் தேதி வரை ராவல்பிண்டியிலும், ஏப்ரல் 5ம் தேதி முதல் 9ம் தேதி வரை கராச்சியிலும் நடக்க உள்ளன. ஒரே ஒரு ஒருநாள் போட்டி ஏப்ரல். 3ம் தேதி கராச்சியில் நடைபெறுகிறது.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு தலைவர் ஈசான் மணி, “வங்கதேசத்துடன் போட்டிகளில் பங்கேற்பது குறித்து அட்டவணை முழுமை பெற்றுள்ளதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சேர்மன் சஷாங்க் மனோகருக்கு நன்றி” என்று கூறினார்.தொடர்புடைய செய்திகள்

1. பாகிஸ்தான், சவுதி அரேபியா உறவில் விரிசல்: காஷ்மீர் விவகாரம் காரணமா?
பாகிஸ்தான், சவுதி அரேபியா உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதற்கு காஷ்மீர் விவகாரம் காரணமா என கேள்வி எழுந்துள்ளது.
2. பாகிஸ்தானில் மோட்டார் சைக்கிளில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்ததில் துணை ராணுவ படை வீரர் உள்பட 6 பலி
பாகிஸ்தானில் ஒரு சந்தையில் மோட்டார் சைக்கிளில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்து சிதறியதில் துணை ராணுவ படை வீரர் உள்பட 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
3. இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தானியர் சுட்டுக்கொலை
இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தானியர் சுட்டுக்கொல்லப்பட்டார்.
4. பாகிஸ்தானின் புதிய வரைபடத்தை இந்தியா நிராகரித்தது; அபத்தமானது என கண்டனம்
பாகிஸ்தானின் புதிய வரைபடத்தை முற்றிலும் நிராகரித்துள்ள மத்திய அரசு, இது தொடர்பாக கண்டனங்களையும் பதிவு செய்துள்ளது.
5. பாகிஸ்தானின் பிரபல டிவி ஹேக் செய்யப்பட்டு இந்தியாவுக்கு சுதந்திர தின வாழ்த்துக்கள்
பாகிஸ்தானின் பிரபல செய்தித் தொலைக்காட்சி திடீரென சில நிமிடங்களுக்கு ஹேக் செய்யப்பட்டு, இந்திய தேசியக்கொடி திரையில் தோன்றியதாக தகவல் வெளியாகியுள்ளது.