கிரிக்கெட்

இந்திய முன்னாள் ஆல்-ரவுண்டர் பாபு நட்கர்னி மரணம் - தொடர்ந்து 21 ஓவர்கள் மெய்டன் வீசிய சாதனையாளர் + "||" + Former Indian all-rounder Babu Nadkarni Death

இந்திய முன்னாள் ஆல்-ரவுண்டர் பாபு நட்கர்னி மரணம் - தொடர்ந்து 21 ஓவர்கள் மெய்டன் வீசிய சாதனையாளர்

இந்திய முன்னாள் ஆல்-ரவுண்டர் பாபு நட்கர்னி மரணம் - தொடர்ந்து 21 ஓவர்கள் மெய்டன் வீசிய சாதனையாளர்
இந்திய முன்னாள் ஆல்-ரவுண்டர் பாபு நட்கர்னி காலமானார்.
மும்பை, 

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்-ரவுண்டரான மராட்டியத்தை சேர்ந்த பாபு நட்கர்னி நேற்று மும்பையில் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 86. வயோதிகம் காரணமாக உயிரிழந்த பாபு நட்கர்னிக்கு மனைவியும், ஒரு மகளும் உள்ளனர்.

41 டெஸ்டுகளில் விளையாடியுள்ள அவர் 88 விக்கெட் வீழ்த்தியதோடு 1,414 ரன்களும் எடுத்துள்ளார். இடக்கை சுழற்பந்து வீச்சாளரான பாபு நட்கர்னி சிக்கனமாக பந்து வீசுவதில் கில்லாடியாக விளங்கினார். 1964-ம் ஆண்டு சென்னையில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டில் தொடர்ச்சியாக 21 மெய்டன் ஓவர்கள் வீசி சாதனை படைத்தார். அந்த இன்னிங்சில் அவர் 32 ஓவர்கள் பந்து வீசி 27 மெய்டனுடன் வெறும் 5 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்தார். ஆனால் விக்கெட் எடுக்கவில்லை.