கிரிக்கெட்

இந்தியா-ஆஸ்திரேலியா இறுதி ஒருநாள் போட்டி: கருப்பு பட்டை அணிந்து களமிறங்கிய இந்தியா + "||" + India-Australia final ODI: India wearing black badge

இந்தியா-ஆஸ்திரேலியா இறுதி ஒருநாள் போட்டி: கருப்பு பட்டை அணிந்து களமிறங்கிய இந்தியா

இந்தியா-ஆஸ்திரேலியா இறுதி ஒருநாள் போட்டி: கருப்பு பட்டை அணிந்து களமிறங்கிய இந்தியா
இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான இறுதி ஒருநாள் போட்டியில் இந்திய அணி வீரர்கள் கையில் கருப்பு பட்டை அணிந்து விளையாடி வருகின்றனர்.
பெங்களூரு,

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ள ஆஸ்திரேலிய அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடரில் விளையாடி வருகின்றது. 

மும்பையில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. நேற்று முன்தினம் ராஜ்கோட்டில் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது.

கடைசி மற்றும் 3வது ஒருநாள் போட்டி இன்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் பின்ச் பேட்டிங்கை தேர்வு செய்தார். 

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்-ரவுண்டரான மராட்டியத்தை சேர்ந்த பாபு நட்கர்னி(வயது 86) கடந்த 17 ஆம் தேதி மும்பையில் மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாகவும் மற்றும் அவருக்கு மரியாதை செலுத்தும் வகையிலும் கையில் கறுப்பு பட்டை அணிந்து இந்திய அணி வீரர்கள் விளையாடி வருகின்றனர்.

மும்பையை பூர்வீகமாக கொண்ட நட்கர்னி 191 முதல் தரப் போட்டிகளில் விளையாடி 500 விக்கெட்டுகளையும், 8,880 ரன்களையும் எடுத்துள்ளார். இவர் இந்திய அணிக்காக 41 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 1,414 ரன்கள் எடுத்துள்ளார்.

இவர் கடந்த 1964 ஆம் ஆண்டு சென்னையில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டில் தொடர்ச்சியாக 21 மெய்டன் ஓவர்கள் வீசி சாதனை படைத்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. இந்தியா-நியூசிலாந்து லெவன் அணிகள் மோதும் பயிற்சி ஆட்டம் இன்று தொடங்குகிறது
ஒருநாள் போட்டி தொடரில் இந்திய அணி 0-3 என்ற கணக்கில் தோல்வி கண்டு பெருத்த ஏமாற்றம் அளித்தது. அடுத்து இவ்விரு அணிகள் இடையே 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடர் நடைபெறுகிறது.
2. இந்தியா-நியூசிலாந்து ‘ஏ’ அணிகள் இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது ரஹானே சதம் அடித்தார்
இந்தியா ‘ஏ’-நியூசிலாந்து ‘ஏ’ அணிகள் இடையிலான அதிகாரபூர்வமற்ற 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லின்கானில் நடந்தது.
3. இந்தியா-இலங்கை மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வுகாண மேலாண்மை ஆணையம் இலங்கை மந்திரி சிறப்பு பேட்டி
இந்தியா-இலங்கை மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வு காண பாக் நீரிணை-மன்னார் வளைகுடா கூட்டு கடல்சார் மீன்வள மேலாண்மை ஆணையம் அமைக்கவேண்டும் என்று இலங்கை மந்திரி டக்ளஸ் தெரிவித்துள்ளார்.
4. நியூசிலாந்துக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட் ; இந்தியா முதலில் பந்து வீச்சு
நியூசிலாந்துக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
5. தடுமாறி மீண்டது நியூசிலாந்து ; இந்திய அணிக்கு 274 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயம்
ஆக்லாந்து ஒருநாள் போட்டியில் இந்திய அணிக்கு வெற்றி இலக்காக 274 ரன்களை நியூசிலாந்து அணி நிர்ணயித்துள்ளது.