கிரிக்கெட்

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இறுதி ஒருநாள் போட்டி: சதம் அடித்தார் ரோகித் சர்மா + "||" + Rohit Sharma scoring a century in the final ODI against Australia

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இறுதி ஒருநாள் போட்டி: சதம் அடித்தார் ரோகித் சர்மா

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இறுதி ஒருநாள் போட்டி: சதம் அடித்தார் ரோகித் சர்மா
இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான இறுதி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய வீரர் ரோகித் சர்மா சதம் விளாசி அசத்தினார்.
பெங்களூரு,

இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான கடைசி மற்றும் 3வது ஒருநாள் போட்டி இன்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலாவதாக பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 286 ரன்கள் குவித்தது.

இதனை தொடர்ந்து இந்திய அணி 287 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடி வருகிறது. தொடரை கைப்பற்றும் முனைப்புடன் இரு அணி வீரர்களும் விளையாடி வருகின்றனர்.

காயம் காரணமாக ஷிகர் தவான் தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கவில்லை. இதனை தொடர்ந்து இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா மற்றும் கே.எல்.ராகுல் களம் இறங்கினர்.

நிலைத்து நின்று ஆடிய ரோகித் சர்மா 110 பந்துகளில்,  8 பவுண்டரி, 5 சிக்சர்களுடன் 100 ரன்களை கடந்தார். லோகேஷ் ராகுல் 19 ரன்களில் ஆட்டமிழந்ததையடுத்து 3 வது விக்கெட்டுக்கு களமிறங்கிய விராட் கோலி அரை சதத்தை கடந்து தொடர்ந்து விளையாடி வருகிறார்.

தொடர்புடைய செய்திகள்

1. இந்தியாவில் புதிய உச்சம்: ஒரே நாளில் 64 ஆயிரம் பேருக்கு கொரோனா - பாதிப்பு 21 லட்சத்தை தாண்டியது
இந்தியாவில் புதிய உச்சமாக ஒரே நாளில் 64 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதித்துள்ளது. மொத்த பாதிப்பு, 21 லட்சத்தை தாண்டி உள்ளது.
2. இந்தியாவில் ஒரே நாளில் சாதனை: 54 ஆயிரம் பேர் கொரோனாவில் இருந்து மீண்டனர்
இந்தியாவில் ஒரே நாளில் சாதனை அளவாக, 54 ஆயிரம் பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர்.
3. இந்தியாவில் தொடர்ந்து 2-வது நாளாக 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு
இந்தியாவில் தொடர்ந்து 2-வது நாளாக 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.
4. இந்தியாவில் கொரோனாவில் இருந்து ஒரே நாளில் 49 ஆயிரம் பேர் குணம் அடைந்தனர்
இந்தியாவில் நேற்று காலை 8 மணியுடன் முடிந்த ஒரே நாளில், கொரோனா பாதித்து பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 48 ஆயிரத்து 900 பேர் குணம் அடைந்து வீடுகளுக்கு திரும்பினர்.
5. இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணம் அடைந்தோர் விகிதம் 67.98 சதவீதமாக உயர்வு
இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணம் அடைந்தோர் விகிதம் 67.98 சதவீதமாக உயர்ந்துள்ளது.