கிரிக்கெட்

என் மீதான குற்றச்சாட்டு ஆதாரமற்றது ; ரூ.100 கோடி மான நஷ்ட வழக்கு - முகமது அசாருதீன் + "||" + Case against Azharuddin, 2 others for ‘cheating’ travel agent

என் மீதான குற்றச்சாட்டு ஆதாரமற்றது ; ரூ.100 கோடி மான நஷ்ட வழக்கு - முகமது அசாருதீன்

என் மீதான குற்றச்சாட்டு ஆதாரமற்றது ; ரூ.100 கோடி மான நஷ்ட வழக்கு - முகமது அசாருதீன்
என் மீது கூறப்படும் குற்றச்சாட்டு "ஆதாரமற்றது" என்மீது புகார் கூறிய முகமது ஷாஹாப் மீது சட்ட நடவடிக்கை எடுப்பேன் என முன்னாள் கிரிக்கெட் வீரர அசாருதீன் கூறி உள்ளார்.
மும்பை

மராட்டிய மாநில அவுரங்காபாத் நகரில் உள்ள டேனிஷ் டூர்ஸ் அண்ட் டிராவல்ஸ் ஏஜென்சியின் உரிமையாளர்  முகமது ஷாஹாப் தன்னிடம் ரூ.20.96 லட்சம்  மோசடி செய்ததாக முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் முகமது அசாருதீன் மற்றும் கான், அவாக்கல் ஆகிய 2 பேர் மீது சிட்டி சவுக் போலீஸ் நிலையத்தில்   புகார் அளித்து உள்ளார்.

அவர் அளித்துள்ள புகாரில்  கடந்த ஆண்டு நவம்பரில் முன்னாள் இந்திய கேப்டன் முகமது அசாருதீன்   தனிப்பட்ட உதவியாளரின் வேண்டுகோளின் பேரில் அவருக்கும்  மற்றும் சிலருக்கு ரூ .20.96 லட்சம் மதிப்புள்ள பல்வேறு சர்வதேச விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ததாக தனது புகாரில் குற்றம் சாட்டி உள்ளார். மேலும்  ஆன்லைனில் பணம் செலுத்துவதாக பலமுறை அவருக்கு உறுதி அளிக்கப்பட்டதாகவும் ஆனால் அவருக்கு பணம் எதுவும் கிடைக்கவில்லை என குற்றம் சாட்டி உள்ளார்.

இது குறித்து போலீசார் முகமது அசாருதீன் மற்றும் கான், அவாக்கல் ஆகிய மூன்று பேர் மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 420 (மோசடி), 406 ( நம்பிக்கையை மீறுதல்) மற்றும் 34 (பொதுவான நோக்கம்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

இது குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் அசாருதீன் ட்விட்டரில் வெளியிட்ட வீடியோவில், 

இந்த புகாரில் எந்த உண்மையும் இல்லை, மேலும் இது வெளிச்சத்திற்கு வரும்படி செய்யப்படுகிறது. புகாரில் கூறப்பட்ட குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை. புகார்தாரருக்கு எதிராக ரூ. 100 கோடி  மான நஷ்ட வழக்குத் தாக்கல் செய்வேன் என கூறி உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா எதிரொலியால் ஐபிஎல் போட்டிகள் ஒத்திவைப்பு
கொரோனா எதிரொலியால் ஐபிஎல் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. மார்ச் 29 ஆம் தேதிக்கு பதில், ஏப்ரல் 15 ஆம் தேதி தொடங்கும்.
2. வித்தியாசமான ஹேர் ஸ்டைல்: சென்னை வந்த டோனி ; உற்சாக வரவேற்பு
ஐபிஎல் தொடரில் பங்கேற்பதற்காக சென்னை வந்தடைந்த டோனிக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
3. இரு நாடுகளும் வெங்காயம்,தக்காளி வர்த்தகம் செய்ய முடியும் என்றால் ஏன் கிரிக்கெட் விளையாடக்கூடாது -சோயிப் அக்தர்
இரு நாடுகளும் வெங்காயம், தக்காளி வர்த்தகம் செய்ய முடியும் என்றால் , ஏன் கிரிக்கெட் விளையாடக்கூடாது இருதரப்பு கிரிக்கெட் போட்டி குறித்து சோயிப் அக்தர் கேள்வி எழுப்பி உள்ளார்.
4. ஐ.பி.எல். அட்டவணை முழு விவரம் : முதல் ஆட்டத்தில் சென்னை-மும்பை அணிகள் மோதல்
8 அணிகள் பங்கேற்கும் 13-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடருக்கான போட்டி அட்டவணை முழு விவரம் வருமாறு:-
5. இந்தியாவுக்கு கிடைத்த மிகச்சிறந்த கேப்டன் டோனி தான்-சுரேஷ் ரெய்னா புகழாரம்
மகேந்திர சிங் டோனி தான் இந்தியாவுக்கு கிடைத்த சிறந்த கேப்டன் என்று தான் நம்புவதாக சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.

ஆசிரியரின் தேர்வுகள்...