கிரிக்கெட்

"பாகிஸ்தானுக்குச் செல்கிறோம், எங்களுக்காக பிரார்த்தனை செய்யுங்கள்: வங்காளதேச வீரர் + "||" + Remember us in your prayers Bangladesh's Mustafizur Rahman tweets before leaving for Pakistan

"பாகிஸ்தானுக்குச் செல்கிறோம், எங்களுக்காக பிரார்த்தனை செய்யுங்கள்: வங்காளதேச வீரர்

"பாகிஸ்தானுக்குச் செல்கிறோம், எங்களுக்காக பிரார்த்தனை செய்யுங்கள்: வங்காளதேச வீரர்
பாகிஸ்தானுக்குச் செல்கிறோம், எங்களுக்காக பிரார்த்தனை செய்யுங்கள் என வங்காளதேச வீரரின் ட்விட் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
டாக்கா: 

பாகிஸ்தானுக்கு பயணம் மேற்கொண்டுள்ள  வங்காள தேச  அணியில் இடம்பெற்று இருக்கும் இடது கை வேகப்பந்து வீச்சாளர் முஸ்தாபிசுர் ரஹ்மான், அணி புறப்படுவதற்கு முன்பு ஒரு சர்ச்சை  ட்வீட்டை வெளியிட்டார். அது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வங்காள தேச கிரிக்கெட்  அணி  ஜனவரி- ஏப்ரல் மாதங்கள் பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து  இரண்டு டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகள்  ஒருநாள் போட்டி கொண்ட  தொடரில் விளையாட உள்ளது.

முன்னதாக பாகிஸ்தானில் பாதுகாப்பு நிலைமை மோசமாக இருப்பதால் வங்காள தேச கிரிக்கெட் வீரர்கள் இந்த தொடருக்காக பாகிஸ்தானுக்கு செல்ல விரும்பவில்லை என கூறப்பட்டது. 

முஷ்பிகுர் ரஹீம் போன்ற மூத்த வீரர்கள் தனிப்பட்ட காரணங்களைக் கூறி பாகிஸ்தான் செல்ல தயங்கினர். அதன்பிறகு, வங்காளதேச இளம் வீரர்களும்  சுற்றுப்பயணத்திலிருந்து வெளியேறினர்.

இருப்பினும், இரு அணிகளின் அதிகாரிகளும் துபாயில் பலகட்ட ஆலோசனை நடத்தினர். அதன் பிறகு   வங்காளதேச கிரிக்கெட் வாரியம் (பி.சி.பி) தங்கள் அணியை கிரிக்கெட் தொடருக்கு அனுப்ப ஒப்புக்கொண்டது.

இந்த நிலையில் நேற்று வங்காளதேச அணி வீரர்கள் பாகிஸ்தான் புறப்பட்டு சென்றனர். அதற்கு முன்  முஸ்தாபிசூர் ரஹ்மான் போட்ட  ட்வீட் அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது

 அணி புறப்படுவதற்கு முன்னர் தனது அணியினருடன் சேர்ந்து ஒரு செல்ஃபி எடுத்த ரஹ்மான் அதில் ட்விட்டரில் பதிவிட்டு  தம்மைப் பின்பற்றுபவர்களிடம் அவர்களுக்காக பிரார்த்திக்கும் படி கேட்டுக்கொண்டார்: "பாகிஸ்தானுக்குச் செல்கிறோம், உங்கள் பிரார்த்தனைகளில் எங்களை நினைவில் கொள்ளுங்கள். என கூறி உள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. இரு நாடுகளும் வெங்காயம்,தக்காளி வர்த்தகம் செய்ய முடியும் என்றால் ஏன் கிரிக்கெட் விளையாடக்கூடாது -சோயிப் அக்தர்
இரு நாடுகளும் வெங்காயம், தக்காளி வர்த்தகம் செய்ய முடியும் என்றால் , ஏன் கிரிக்கெட் விளையாடக்கூடாது இருதரப்பு கிரிக்கெட் போட்டி குறித்து சோயிப் அக்தர் கேள்வி எழுப்பி உள்ளார்.
2. ஐ.பி.எல். அட்டவணை முழு விவரம் : முதல் ஆட்டத்தில் சென்னை-மும்பை அணிகள் மோதல்
8 அணிகள் பங்கேற்கும் 13-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடருக்கான போட்டி அட்டவணை முழு விவரம் வருமாறு:-
3. இந்தியாவுக்கு கிடைத்த மிகச்சிறந்த கேப்டன் டோனி தான்-சுரேஷ் ரெய்னா புகழாரம்
மகேந்திர சிங் டோனி தான் இந்தியாவுக்கு கிடைத்த சிறந்த கேப்டன் என்று தான் நம்புவதாக சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.
4. ஆஸ்திரேலிய வீராங்கனை சவாலை ஏற்று ஒரு ஓவர் பேட்டிங் செய்யும் சச்சின்
கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்றுவிட்ட சச்சின் தெண்டுல்கர், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீராங்கனை எல்லிஸ் பெர்ரியின் சவாலை ஏற்று, ஒரே ஒரு ஓவர் மட்டுமே ஆட உள்ளார்.
5. நியூசிலாந்து தொடரில் இருந்து இந்திய வீரர் ரோகித் சர்மா காயத்தால் விலகல்
நியூசிலாந்து தொடரில் இருந்து காயம் காரணமாக இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா விலகி இருக்கிறார்.