கிரிக்கெட்

நியூசிலாந்துக்கு எதிரான 20 ஓவர் போட்டி டாஸ் வென்ற இந்தியா பந்து வீச்சு தேர்வு + "||" + India win toss, opt to bowl against New Zealand in

நியூசிலாந்துக்கு எதிரான 20 ஓவர் போட்டி டாஸ் வென்ற இந்தியா பந்து வீச்சு தேர்வு

நியூசிலாந்துக்கு எதிரான 20 ஓவர் போட்டி டாஸ் வென்ற இந்தியா பந்து வீச்சு தேர்வு
நியூசிலாந்துக்கு எதிரான 20 ஓவர் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
சென்னை

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி ஐந்து 20 ஓவர், மூன்று ஒருநாள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது.

முதலில் 20 ஓவர் தொடர் நடத்தப்படுகிறது. இதன்படி இந்தியா-நியூசிலாந்து இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி ஆக்லாந்தில் உள்ள ஈடன்பார்க் ஸ்டேடியத்தில் இன்று  நடக்கிறது. இந்திய நேரப்படி பகல் 12.20 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. இதில்  டாஸ் வென்ற இந்திய அணி  பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

இந்தியா: ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல், விராட் கோலி (கேப்டன்), ஸ்ரேயாஸ் அய்யர், மனிஷ் பாண்டே, ஷிவம் துபே, வாஷிங்டன் சுந்தர் அல்லது ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ் அல்லது யுஸ்வேந்திர சாஹல், முகமது ஷமி, நவ்தீப் சைனி, ஜஸ்பிரித் பும்ரா.

நியூசிலாந்து: மார்ட்டின் கப்தில், காலின் முன்ரோ, டிம் செய்பெர்ட், வில்லியம்சன் (கேப்டன்), ராஸ் டெய்லர், காலின் டி கிரான்ட்ஹோம் அல்லது டேரில் மிட்செல், மிட்செல் சான்ட்னெர், சோதி, டிம் சவுதி, ஸ்காட் குஜ்ஜெலின், ஹாமிஷ் பென்னட்.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா எதிரொலியால் ஐபிஎல் போட்டிகள் ஒத்திவைப்பு
கொரோனா எதிரொலியால் ஐபிஎல் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. மார்ச் 29 ஆம் தேதிக்கு பதில், ஏப்ரல் 15 ஆம் தேதி தொடங்கும்.
2. வித்தியாசமான ஹேர் ஸ்டைல்: சென்னை வந்த டோனி ; உற்சாக வரவேற்பு
ஐபிஎல் தொடரில் பங்கேற்பதற்காக சென்னை வந்தடைந்த டோனிக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
3. இரு நாடுகளும் வெங்காயம்,தக்காளி வர்த்தகம் செய்ய முடியும் என்றால் ஏன் கிரிக்கெட் விளையாடக்கூடாது -சோயிப் அக்தர்
இரு நாடுகளும் வெங்காயம், தக்காளி வர்த்தகம் செய்ய முடியும் என்றால் , ஏன் கிரிக்கெட் விளையாடக்கூடாது இருதரப்பு கிரிக்கெட் போட்டி குறித்து சோயிப் அக்தர் கேள்வி எழுப்பி உள்ளார்.
4. ஐ.பி.எல். அட்டவணை முழு விவரம் : முதல் ஆட்டத்தில் சென்னை-மும்பை அணிகள் மோதல்
8 அணிகள் பங்கேற்கும் 13-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடருக்கான போட்டி அட்டவணை முழு விவரம் வருமாறு:-
5. இந்தியாவுக்கு கிடைத்த மிகச்சிறந்த கேப்டன் டோனி தான்-சுரேஷ் ரெய்னா புகழாரம்
மகேந்திர சிங் டோனி தான் இந்தியாவுக்கு கிடைத்த சிறந்த கேப்டன் என்று தான் நம்புவதாக சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.