கிரிக்கெட்

2வது டி20 போட்டி; டாஸ் வென்ற நியூசிலாந்து பேட்டிங் தேர்வு + "||" + 2nd T20I; Toss won New Zealand selected batting

2வது டி20 போட்டி; டாஸ் வென்ற நியூசிலாந்து பேட்டிங் தேர்வு

2வது டி20 போட்டி; டாஸ் வென்ற நியூசிலாந்து பேட்டிங் தேர்வு
இந்தியாவுக்கு எதிரான 2வது டி20 போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
ஆக்லாந்து,

நியூசிலாந்துக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடி வருகிறது. இதில் ஆக்லாந்தில் நடந்த முதலாவது ஆட்டத்தில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் இந்தியா-நியூசிலாந்து இடையிலான 2-வது 20 ஓவர் போட்டி அதே ஆக்லாந்தில் உள்ள ஈடன்பார்க் ஸ்டேடியத்தில் இன்று நடக்கிறது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.  இதனால் இந்திய அணி பந்து வீசுகிறது.  இரவில் பனிப்பொழிவின் தாக்கம் இருப்பதால் இன்றைய ஆட்டத்தில் டாஸ் வெல்லும் அணி 2-வது பேட்டிங் செய்யவே அதிக வாய்ப்பு உள்ளது என்று கூறப்பட்ட நிலையில், நியூசிலாந்து  பேட்டிங் செய்கிறது.

இதேபோன்று இரு அணிகளிலும் விளையாடும் வீரர்களில் எந்தவித மாற்றமுமில்லை.

இந்தியா: ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல், விராட் கோலி (கேப்டன்), ஸ்ரேயாஸ் அய்யர், மனிஷ் பாண்டே, ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, யுஸ்வேந்திர சாஹல், முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா, நவ்தீப் சைனி அல்லது ஷர்துல் தாகூர்.

நியூசிலாந்து: மார்ட்டின் கப்தில், காலின் முன்ரோ, கேன் வில்லியம்சன் (கேப்டன்), காலின் டி கிரான்ட்ஹோம், ராஸ் டெய்லர், டிம் செய்பெர்ட், மிட்செல் சான்ட்னெர் அல்லது டேரில் மிட்செல், சோதி, டிம் சவுதி, பிளேர் டிக்னெர், ஹாமிஷ் பென்னட்.