கிரிக்கெட்

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட்: தென்ஆப்பிரிக்க அணிக்கு 466 ரன்கள் இலக்கு + "||" + Last Test against England: Target of 466 runs for the team South Africa

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட்: தென்ஆப்பிரிக்க அணிக்கு 466 ரன்கள் இலக்கு

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட்: தென்ஆப்பிரிக்க அணிக்கு 466 ரன்கள் இலக்கு
இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்டில் தென்ஆப்பிரிக்க அணிக்கு 466 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஜோகன்னஸ்பர்க்,

இங்கிலாந்து - தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் நடந்து வருகிறது. இதில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து 400 ரன்கள் குவித்தது. பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய தென்ஆப்பிரிக்கா 2-வது நாள் முடிவில் 6 விக்கெட்டுக்கு 88 ரன்களுடன் தடுமாறிக் கொண்டிருந்தது.


இந்த நிலையில் 3-வது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய தென்ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்சில் 183 ரன்னில் சுருண்டு ‘பாலோ-ஆன்’ ஆனது. அதிகபட்சமாக விக்கெட் கீப்பர் குயின்டான் டி காக் 76 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் மார்க்வுட் 5 விக்கெட்டுகளும், பென் ஸ்டோக்ஸ், கிறிஸ்வோக்ஸ் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

அடுத்து தென்ஆப்பிரிக்காவுக்கு பாலோ-ஆன் வழங்காத இங்கிலாந்து 217 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை விளையாடியது. கேப்டன் ஜோ ரூட் (58 ரன்), டாம் சிப்லி (44 ரன்), சாம் கர்ரன் (35 ரன்), பென் ஸ்டோக்ஸ் (28 ரன்) தவிர மற்றவர்கள் குறைந்த ரன்னில் வீழ்ந்தனர்.

இங்கிலாந்து அணி 2-வது இன்னிங்சில் 61.3 ஓவர்களில் 248 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. அத்துடன் 3-வது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.

தென்ஆப்பிரிக்க அறிமுக இடக்கை வேகப்பந்து வீச்சாளர் பீரன் ஹென்ரிக்ஸ் 5 விக்கெட்டுகளை அள்ளினார்.

இதன் மூலம் தென்ஆப்பிரிக்க அணிக்கு 466 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவரை யாரும் எட்டிப்பிடிக்காத இலக்கை நோக்கி அந்த அணி இன்று 4-வது நாளில் விளையாட உள்ளது. இந்த மைதானத்தில் 310 ரன்களுக்கு மேலான இலக்கை யாரும் விரட்டிப்பிடித்ததில்லை என்பது நினைவு கூரத்தக்கது.

தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ள இங்கிலாந்து அணிக்கே, இந்த டெஸ்டில் வெற்றி வாய்ப்பு அதிகமாக இருக்கிறது.

பிலாண்டருக்கு அபராதம்

“தனது கடைசி டெஸ்டில் ஆடும் தென்ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் வெரோன் பிலாண்டர், 2-வது இன்னிங்சில் வெறும் 9 பந்து மட்டுமே வீசிய நிலையில் தசைப்பிடிப்பால் ஏமாற்றத்துடன் வெளியேறினார். முன்னதாக 2-வது நாள் ஆட்டத்தின் போது இங்கிலாந்து பேட்ஸ்மேன் ஜோஸ் பட்லரை அவுட் ஆக்கியதும் கோபமூட்டும் வகையில் நடந்து கொண்டதாக பிலாண்டருக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 15 சதவீதத்தை அபராதமாக ஐ.சி.சி. விதித்துள்ளது”


தொடர்புடைய செய்திகள்

1. இங்கிலாந்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 37,460 ஆக உயர்வு
இங்கிலாந்தில் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை தற்போது 37,460 ஆக உயர்ந்துள்ளது.
2. இங்கிலாந்தில் ஊரடங்கு விதி மீறிய பிரதமரின் ஆலோசகர் பதவி விலகுவாரா?
இங்கிலாந்தில் ஊரடங்கு விதி மீறிய பிரதமரின் ஆலோசகர் பதவி விலகுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
3. இங்கிலாந்து இடைத்தரகரை விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி
இங்கிலாந்து இடைத்தரகரை விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
4. இங்கிலாந்து டென்னிஸ் வீராங்கனை ஹீத்தர் வாட்சன் குடும்பத்தினருடன் தனது பிறந்தநாளை கொண்டாடினார்
ஊரடங்கு நிலையிலும் இங்கிலாந்து டென்னிஸ் வீராங்கனை ஹீத்தர் வாட்சன் தனது 28 வது பிறந்தநாளை தனது குடும்பத்தினருடன் வெள்ளை பிகினியில் கொண்டாடினார்.
5. கொரோனாவுக்கு எதிரான 47 தடுப்பூசிகளை உருவாக்கி வருகிறோம் - ரஷிய துணை பிரதமர்
கொரோனாவுக்கு எதிரான 47 தடுப்பூசிகளை உருவாக்கி வருவதாக ரஷிய துணை பிரதமர் தெரிவித்துள்ளார்.