கிரிக்கெட்

பெண்கள் கிரிக்கெட்: தமிழக அணி 2-வது தோல்வி + "||" + Women's Cricket: Tamil Nadu's 2nd defeat

பெண்கள் கிரிக்கெட்: தமிழக அணி 2-வது தோல்வி

பெண்கள் கிரிக்கெட்: தமிழக அணி 2-வது தோல்வி
பெண்கள் கிரிக்கெட் போட்டியில், தமிழக அணி 2-வது தோல்வியை தழுவியது.
சென்னை,

இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் 23 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடரில் ‘சி’ பிரிவு லீக் ஆட்டங்கள் சென்னையில் நடந்து வருகிறது. இதில் குருநானக் கல்லூரி மைதானத்தில் நேற்று நடந்த ஆட்டத்தில் தமிழக அணி, திரிபுராவை எதிர்கொண்டது. முதலில் பேட்டிங் செய்த தமிழக அணி 10 ஓவர்களில் 37 ரன்னுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 5-வது விக்கெட்டுக்கு யோக்யாஸ்ரீ, அர்ஷி சவுத்ரியுடன் இணைந்தார். இருவரும் நிலைத்து நின்று ஆடி 181 ரன்கள் திரட்டினார்கள். 50 ஓவர்களில் தமிழக அணி 4 விக்கெட் இழப்புக்கு 218 ரன்கள் எடுத்தது. இந்த போட்டி தொடரில் 2-வது சதம் அடித்த அர்ஷி சவுத்ரி 105 ரன்னுடனும், யோக்யாஸ்ரீ 78 ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர். பின்னர் இலக்கை நோக்கி ஆடிய திரிபுரா அணி 49.5 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 219 ரன்கள் எடுத்து 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 3-வது ஆட்டத்தில் ஆடிய தமிழக அணி சந்தித்த 2-வது தோல்வி இதுவாகும்.

தொடர்புடைய செய்திகள்

1. மின்வாரிய கூடைப்பந்து: தமிழக அணிக்கு 2-வது வெற்றி
மின்வாரிய கூடைப்பந்து போட்டியில், தமிழக அணிக்கு 2-வது வெற்றி கிடைத்தது.
2. பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்: இந்திய அணி 2-வது வெற்றி - வங்காளதேசத்தை வீழ்த்தியது
பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் இந்திய அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வங்காளதேசத்தை வீழ்த்தி 2-வது வெற்றியை ருசித்தது.
3. பெடரேஷன் கோப்பை கைப்பந்து: தமிழக அணிக்கு 2-வது இடம்
பெடரேஷன் கோப்பை கைப்பந்து போட்டியில், தமிழக அணிக்கு 2-வது இடம் கிடைத்தது.
4. பெண்கள் முத்தரப்பு கிரிக்கெட் இறுதி ஆட்டத்தில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இன்று பலப்பரீட்சை
பெண்கள் முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட் தொடர் ஆஸ்ரேலியாவில் நடந்து வருகிறது.
5. ரஞ்சி கிரிக்கெட்டில் தமிழக அணி இன்னிங்ஸ் வெற்றி
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் பரோடாவுக்கு எதிரான ஆட்டத்தில் தமிழக அணி இன்னிங்ஸ் மற்றும் 57 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.