கிரிக்கெட்

3வது 20 ஓவர் போட்டி: நியூசிலாந்து அணிக்கு 180 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்தியா + "||" + NZvIND: India finish on 179/5

3வது 20 ஓவர் போட்டி: நியூசிலாந்து அணிக்கு 180 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்தியா

3வது 20 ஓவர் போட்டி: நியூசிலாந்து அணிக்கு 180 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்தியா
நியூசிலாந்து அணிக்கு எதிரான 3-வது 20 ஓவர் போட்டியில் அதிரடியாக விளையாடிய இந்திய அணி 179 ரன்கள் குவித்துள்ளது.
ஹாமில்டன்,

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடி வருகிறது.  முதல் 2  போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள இந்திய அணி தொடரில் 2-0 என முன்னிலையில் உள்ளது.

இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் 3-வது 20 ஓவர்  போட்டி ஹாமில்டன் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது.  இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா - கே.எல். ராகுல் களமிறங்கினர். முதல் 2 போட்டிகளில் சோபிக்காத ரோகித் சர்மா இன்றைய போட்டியில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

ராகுல் 27 ரன்களில் ஆட்டமிழந்தார்.  மறுமுனையில் அதிரடியாக விளையாடி ரோகித் அரைசதம் கடந்து 65 ரன்களில் ஆட்டமிழந்தார்.

* மூன்று வித கிரிக்கெட்டுகளில் தொடக்க வீரராக களம் இறங்கும் ரோகித் சர்மா 65 ரன்கள் எடுத்து 10 ஆயிரம் ரன்கள் என்ற மைல்கல்லை எட்டினார்.

* சர்வதேச அளவில் அதிவேகமாக இந்த மைல்கல்லை எட்டிய வீரர்களில் ரோகித் சர்மாவுக்கு 2-வது இடம் (219 இன்னிங்ஸ்) கிடைத்து உள்ளது.  முதலிடத்தில் சச்சின் (214 இன்னிங்ஸ்) உள்ளார்.

இந்திய அணியில் 3-வது வீரராக களமிறங்கும் விராட் கோலி, இந்த முறை மாற்றத்திற்காக ஷிவம் துபேவை களமிறக்கினார்.

ஆனால் அதிரடியாக விளையாடி ரன் குவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஷிவம் துபே 3 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.  அடுத்து வந்த ஷிரேயாஸ் ஐயர் 17 ரன்களிலும், கேப்டன் விராட் கோலி 38 ரன்களிலும் அவுட்டாகினர்.

இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு179 ரன்கள் எடுத்தது.  நியூசிலாந்து அணி சார்பில் ஹமிஷ் பென்னட் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா எதிரொலியால் ஐபிஎல் போட்டிகள் ஒத்திவைப்பு
கொரோனா எதிரொலியால் ஐபிஎல் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. மார்ச் 29 ஆம் தேதிக்கு பதில், ஏப்ரல் 15 ஆம் தேதி தொடங்கும்.
2. வித்தியாசமான ஹேர் ஸ்டைல்: சென்னை வந்த டோனி ; உற்சாக வரவேற்பு
ஐபிஎல் தொடரில் பங்கேற்பதற்காக சென்னை வந்தடைந்த டோனிக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
3. இரு நாடுகளும் வெங்காயம்,தக்காளி வர்த்தகம் செய்ய முடியும் என்றால் ஏன் கிரிக்கெட் விளையாடக்கூடாது -சோயிப் அக்தர்
இரு நாடுகளும் வெங்காயம், தக்காளி வர்த்தகம் செய்ய முடியும் என்றால் , ஏன் கிரிக்கெட் விளையாடக்கூடாது இருதரப்பு கிரிக்கெட் போட்டி குறித்து சோயிப் அக்தர் கேள்வி எழுப்பி உள்ளார்.
4. ஐ.பி.எல். அட்டவணை முழு விவரம் : முதல் ஆட்டத்தில் சென்னை-மும்பை அணிகள் மோதல்
8 அணிகள் பங்கேற்கும் 13-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடருக்கான போட்டி அட்டவணை முழு விவரம் வருமாறு:-
5. இந்தியாவுக்கு கிடைத்த மிகச்சிறந்த கேப்டன் டோனி தான்-சுரேஷ் ரெய்னா புகழாரம்
மகேந்திர சிங் டோனி தான் இந்தியாவுக்கு கிடைத்த சிறந்த கேப்டன் என்று தான் நம்புவதாக சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.