இந்தியாவுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட்: நியூசிலாந்து அணியில் உயரமான வீரருக்கு அழைப்பு


இந்தியாவுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட்: நியூசிலாந்து அணியில் உயரமான வீரருக்கு அழைப்பு
x
தினத்தந்தி 30 Jan 2020 11:00 PM GMT (Updated: 30 Jan 2020 9:21 PM GMT)

20 ஓவர் தொடர் முடிந்ததும் இந்தியாவுக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் நியூசிலாந்து அணி ஆடுகிறது.

வெலிங்டன்,

முதலாவது ஒருநாள் போட்டி வருகிற 5-ந் தேதி ஹாமில்டனிலும், 2-வது ஒருநாள் போட்டி 8-ந் தேதி ஆக்லாந்திலும், 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி 11-ந் தேதி மவுன்ட்மாங்கானுவிலும் நடைபெறுகிறது.

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான நியூசிலாந்து அணி நேற்று அறிவிக்கப்பட்டது. அந்த நாட்டின் உயரமான கிரிக்கெட் வீரராக கருதப்படும் (6 அடி 8 அங்குலம்) வேகப்பந்து வீச்சாளர் கைல் ஜாமிசன் அறிமுக வீரராக அணியில் இடம் பிடித்துள்ளார். உள்ளூர் கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்டுள்ள 25 வயதான ஜாமிசன் சர்வதேச போட்டியிலும் அசத்துவாரா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ஸ்காட் குஜ்ஜெலின், ஹாமிஷ் பென்னட் ஆகியோர் நீண்ட இடைவெளிக்கு பிறகு ஒருநாள் போட்டி அணிக்கு திரும்பி இருக்கிறார்கள். காயம் காரணமாக ஓய்வில் இருக்கும் வேகப்பந்து வீச்சாளர்கள் டிரென்ட் பவுல்ட், பெர்குசன், மேட் ஹென்றி ஆகியோரது பெயர் பரிசீலிக்கப்படவில்லை. சுழற்பந்து வீச்சாளர் சோதி முதலாவது ஒருநாள் போட்டியில் மட்டும் விளையாடுவார் என்றும் அதன் பிறகு அவர் இந்திய ‘ஏ’ அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டிக்கான நியூசிலாந்து ‘ஏ’ அணியினருடன் இணைவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடருக்கான நியூசிலாந்து அணி வருமாறு:-

கேன் வில்லியம்சன் (கேப்டன்), ஹாமிஷ் பென்னட், டாம் பிளன்டெல், காலின் டி கிரான்ட்ஹோம், மார்ட்டின் கப்தில், கைல் ஜாமிசன், ஸ்காட் குஜ்ஜெலின், டாம் லாதம், ஜேம்ஸ் நீஷம், ஹென்றி நிகோல்ஸ், மிட்செல் சான்ட்னெர், சோதி (முதல் ஒருநாள் போட்டி மட்டும்), டிம் சவுதி, ராஸ் டெய்லர்.

Next Story