கிரிக்கெட்

கிரிக்கெட் ஆலோசனைக்குழு உறுப்பினர்களாக ஆர்.பி சிங், மதன் லால் நியமனம் - பிசிசிஐ + "||" + RP Singh, Madal Lal named in Cricket Advisory Committee

கிரிக்கெட் ஆலோசனைக்குழு உறுப்பினர்களாக ஆர்.பி சிங், மதன் லால் நியமனம் - பிசிசிஐ

கிரிக்கெட் ஆலோசனைக்குழு உறுப்பினர்களாக ஆர்.பி சிங், மதன் லால் நியமனம் - பிசிசிஐ
கிரிக்கெட் ஆலோசனைக்குழு உறுப்பினர்களாக ஆர்.பி சிங், மதன் லால் உள்ளிட்ட முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
புதுடெல்லி

கிரிக்கெட் ஆலோசனைக்குழு உறுப்பினர்களாக முன்னாள் கிரிக்கெட் வீரர்களான ருத்ர பிரதாப் சிங், மதன் லால் மற்றும் சுல்க்‌ஷனா நாயக் ஆகியோரை பிசிசிஐ நியமனம் செய்துள்ளது. விரைவில் பணிக்காலம் முடிய உள்ள தேர்வுக்குழுவினர்களான எம்.எஸ்.கே பிரசாத் மற்றும் ககன் கோடா ஆகியோருக்கு பதிலாக புதிய தேர்வுக்குழுவினரை, தேர்வு செய்வதே  கிரிக்கெட் ஆலோசனைக்குழு உறுப்பினர்களின் முதன்மை பணியாகும்.

  கிரிக்கெட் ஆலோசனைக்குழு உறுப்பினர்களின் பதவிக்காலம் ஓராண்டு காலம் என்று என்று பிசிசிஐ செயலர் ஜெய்ஷா தெரிவித்துள்ளார்.  இரட்டை ஆதாய பிரச்சினையில் கடந்த ஆண்டு கபில் தேவ் மற்றும் அன்ஷூமன் கேக்வாட் மற்றும் ஷாந்தா ரங்கசாமி ஆகியோர் பதவி விலகியதையடுத்து, கிரிக்கெட் ஆலோசனைக்குழு உறுப்பினர்களாக யாரும் நியமனம் செய்யப்படாமல்  இருந்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் காலவரையின்றி ஒத்திவைப்பு; பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் கால வரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.
2. கொரோனா எதிரொலியால் ஐபிஎல் போட்டிகள் ஒத்திவைப்பு
கொரோனா எதிரொலியால் ஐபிஎல் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. மார்ச் 29 ஆம் தேதிக்கு பதில், ஏப்ரல் 15 ஆம் தேதி தொடங்கும்.
3. இந்திய கிரிக்கெட் அணியின் 87 வயது தீவிர ரசிகை மரணம் -பிசிசிஐ இரங்கல்
இந்திய கிரிக்கெட் அணியின் 87 வயது தீவிர ரசிகை சாருலதா படேல் காலமானார்.
4. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு இந்திய கிரிக்கெட் வாரியம் கண்டனம்
பாகிஸ்தானை விட இந்தியாவில் பாதுகாப்பு அச்சுறுத்தல் அதிகம் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் கூறியதற்கு இந்திய கிரிக்கெட் வாரியம் கண்டனம் தெரிவித்து உள்ளது.