நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட்: இந்திய ‘ஏ’ அணி தோல்வியை தவிர்க்குமா?


நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட்: இந்திய ‘ஏ’ அணி தோல்வியை தவிர்க்குமா?
x
தினத்தந்தி 2 Feb 2020 12:11 AM GMT (Updated: 2 Feb 2020 12:11 AM GMT)

நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில், இந்திய ‘ஏ’ அணி தோல்வியை தவிர்க்குமா என கேள்வி எழுந்துள்ளது.

கிறைஸ்ட்சர்ச்,

இந்தியா ‘ஏ’-நியூசிலாந்து ‘ஏ’ அணிகள் இடையிலான அதிகாரபூர்வமற்ற முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கிறைஸ்ட்சர்ச்சில் நடந்து வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய ‘ஏ’ அணி 216 ரன்னில் ‘ஆல்-அவுட்’ ஆனது. பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய நியூசிலாந்து ‘ஏ’ அணி 2-வது நாள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 385 ரன்கள் எடுத்திருந்தது. இந்த நிலையில் 3-வது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய நியூசிலாந்து ‘ஏ’ அணி முதல் இன்னிங்சில் 7 விக்கெட் இழப்புக்கு 562 ரன்கள் குவித்து ‘டிக்ளேர்’ செய்தது. மார்க் சாப்மன் 114 ரன்னிலும், டேன் கிளவெர் 196 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். 346 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய இந்திய ‘ஏ’ அணி நேற்றைய முடிவில் 37 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 127 ரன்கள் எடுத்துள்ளது. பிரியங்க் பன்சால் 67 ரன்னுடனும், சுப்மான் கில் 33 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். இன்று 4-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடக்கிறது. இந்திய ‘ஏ’ அணி இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க கடுமையாக போராட வேண்டியது இருக்கும்.

Next Story