கிரிக்கெட்

நியூசிலாந்துக்கு எதிரான 5-வது 20 ஓவர் கிரிக்கெட்: இந்திய அணி பேட்டிங் + "||" + 5-th 20 over cricket against New Zealand: Indian team batting

நியூசிலாந்துக்கு எதிரான 5-வது 20 ஓவர் கிரிக்கெட்: இந்திய அணி பேட்டிங்

நியூசிலாந்துக்கு எதிரான 5-வது 20 ஓவர் கிரிக்கெட்: இந்திய அணி பேட்டிங்
நியூசிலாந்துக்கு எதிரான 5-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி வருகிறது.
மவுன்ட் மாங்கானு,

நியூசிலாந்துக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் 2 ஆட்டங்களில் எளிதில் வெற்றி பெற்ற இந்திய அணி அடுத்த இரு ஆட்டங்களில் சூப்பர் ஓவர் வரை போராடி வெற்றியை வசப்படுத்தியது. இதனால் தொடரில் இந்தியா 4-0 என்ற கணக்கில் வலுவான முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி மவுன்ட் மாங்கானுவில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இன்றைய ஆட்டத்தில் விராட் கோலி களமிறங்கவில்லை.

முன்னதாக டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார். அதனை தொடர்ந்து இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கே.எல்.ராகுல், சஞ்சு சாம்சன் களமிறங்கினர்.

இந்நிலையில் சஞ்சு சாம்சன் 2 ரன்களில் கேட்ச் ஆகி வெளியேறியதையடுத்து, 3வது விக்கெட்டுக்கு ரோகித் சர்மா களமிறங்கி விளையாடி வருகிறார்.

தொடர்புடைய செய்திகள்

1. சீனாவுக்கு முன்னதாகவே நவம்பர்-டிசம்பர் மாதங்களில் கொரோனா இந்தியாவுக்குள் நுழைந்திருக்கலாம்...?
நவம்பர்-டிசம்பர் மாதங்களில் கொரோனா இந்தியாவுக்குள் நுழைந்திருக்கலாம் என்று விஞ்ஞானிகள் மதிப்பிடுகின்றனர்.
2. இந்தியாவில் முதல் முறையாக ஒரு நாள் கொரோனா பாதிப்பு 9 ஆயிரத்தை கடந்தது
இந்தியாவில் முதல் முறையாக கொரோனா ஒருநாள் பாதிப்பு 9304 ஆக உயர்ந்து உள்ளது.
3. இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியது
இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,07,615 ஆக உள்ளது இந்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்து உள்ளது.
4. கொரோனா பாதிப்பு உலகின் மோசமான ஏழாவது நாடு இந்தியா
கொரோனா பாதிப்பில் இந்தியா இப்போது உலகின் மோசமான ஏழாவது நாடாக மாறியுள்ளது.
5. சீனா அச்சுறுத்தல் : இந்தியா உள்ளிட்ட பல நாடுகளுடன் இணைந்து செயல்படுவோம் -அமெரிக்கா
சீனா அச்சுறுத்தலைக் கருத்தில் கொண்டு இந்தியா உள்ளிட்ட பல நாடுகளுடன் இணைந்து பங்காளியாக செயல்படும் என அமெரிக்கா கூறி உள்ளது.