20 ஓவர் கிரிக்கெட்: இந்திய பெண்கள் அணி தோல்வி


20 ஓவர் கிரிக்கெட்: இந்திய பெண்கள் அணி தோல்வி
x
தினத்தந்தி 2 Feb 2020 11:23 PM GMT (Updated: 2 Feb 2020 11:23 PM GMT)

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில், இந்திய பெண்கள் அணி தோல்வியடைந்தது.

கான்பெர்ரா,

இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய மூன்று அணிகள் பங்கேற்றுள்ள 20 ஓவர் கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும். நேற்று நடந்த 3-வது லீக்கில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதின. இதில் முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 103 ரன்களுக்கு கட்டுப்படுத்தப்பட்டது. மந்தனா (35 ரன்), கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் (28 ரன்), ராதா யாதவ் (11 ரன்) தவிர யாரும் இரட்டை இலக்கத்தை தொடவில்லை. ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர்கள் எலிஸ் பெர்ரி 4 விக்கெட்டுகளும், விலாமின்க் 3 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.

தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலியா 18.5 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 104 ரன்கள் சேர்த்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஒரு ரவுண்ட் முடிவடைந்துள்ள நிலையில் மூன்று அணிகளும் தலா ஒரு வெற்றி, ஒரு தோல்வியை சந்தித்துள்ளன.

மெல்போர்னில் வருகிற 7-ந்தேதி நடக்கும் 4-வது லீக்கில் இந்திய அணி, இங்கிலாந்தை மீண்டும் எதிர்கொள்கிறது.

Next Story