கிரிக்கெட்

நியூசிலாந்து அணிக்கு எதிரான கடைசி 20 ஓவர் போட்டியிலும் இந்திய அணி வெற்றி - கோலி பெருமிதம் + "||" + India won the last 20 overs against New Zealand - Kohli proud

நியூசிலாந்து அணிக்கு எதிரான கடைசி 20 ஓவர் போட்டியிலும் இந்திய அணி வெற்றி - கோலி பெருமிதம்

நியூசிலாந்து அணிக்கு எதிரான கடைசி 20 ஓவர் போட்டியிலும் இந்திய அணி வெற்றி - கோலி பெருமிதம்
நியூசிலாந்து அணிக்கு எதிரான கடைசி 20 ஓவர் போட்டியிலும் இந்திய அணி வெற்றிபெற்றது குறித்து கேப்டன் கோலி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
மவுன்ட்மாங்கானு,

தொடரை வென்ற பிறகு இந்திய கேப்டன் விராட் கோலி கூறுகையில், ‘இந்த தொடரில் நாங்கள் விளையாடிய விதம் உண்மையிலேயே எங்கள் எல்லோருக்கும் பெருமிதம் அளிக்கிறது. ரோகித் சர்மா காயத்தால் வெளியேறிய நிலையில் இளம் வீரர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து விளையாடி நெருக்கடியை திறம்பட சமாளித்தனர். வெளியில் இருந்து இதை பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக இருந்தது. அவர்கள் இதே உத்வேகத்துடன் அணியை முன்னெடுத்து செல்வார்கள் என்று நம்புகிறேன். ஒவ்வொரு முறையும் அணிக்கு 120 சதவீத பங்களிப்பு அவசியம் என்பதை வீரர்கள் உணர்ந்து செயல்பட வேண்டும். அது தான் வெற்றியை அடைவதற்கான வழிமுறையாகும்’ என்றார்.


‘நானும், நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சனும், ஒரே மாதிரியான மனநிலை, தத்துவம் கொண்டவர்கள். இதே போல் ஒரே மொழியை பேசுகிறோம். நியூசிலாந்து கிரிக்கெட் சிறந்த கைகளில் இருப்பதாக உணர்கிறேன். இந்த அணியை வழிநடத்த சரியான நபர் வில்லியம்சன் தான்’ என்றும் கோலி குறிப்பிட்டார்.

தொடர்புடைய செய்திகள்

1. இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட்: வெஸ்ட் இண்டீஸ் அணி அபார வெற்றி
இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்டில் வெஸ்ட் இண்டீஸ் அணி அபார வெற்றி பெற்றது.
2. இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட்: வெஸ்ட் இண்டீஸ் அணி முன்னிலை
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதலாவது டெஸ்டில் வெஸ்ட் இண்டீஸ் அணி 318 ரன்களுக்கு ஆட்டம் இழந்து 114 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
3. இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி தோற்கும் திட்டத்துடன் விளையாடவில்லை - மைக்கேல் ஹோல்டிங்
கடந்த உலக கோப்பையில் இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி தோற்கும் திட்டத்துடன் விளையாடவில்லை என்று மைக்கேல் ஹோல்டிங் தெரிவித்துள்ளார்.
4. “கொரோனாவுக்கு எதிரான போர் நீண்டது” - பிரதமர் மோடி பேச்சு
பிரதமர் மோடி, ‘மனதின் குரல்’ என்ற நிகழ்ச்சியின் மூலம் நேற்று வானொலியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.
5. கொரோனாவுக்கு எதிரான 47 தடுப்பூசிகளை உருவாக்கி வருகிறோம் - ரஷிய துணை பிரதமர்
கொரோனாவுக்கு எதிரான 47 தடுப்பூசிகளை உருவாக்கி வருவதாக ரஷிய துணை பிரதமர் தெரிவித்துள்ளார்.