கிரிக்கெட்

20 ஓவர் போட்டி தரவரிசைப் பட்டியல்: கே.எல்.ராகுல்,ரோகித் சர்மா முன்னேற்றம்! + "||" + Rahul at career-best second position in T20I Rankings

20 ஓவர் போட்டி தரவரிசைப் பட்டியல்: கே.எல்.ராகுல்,ரோகித் சர்மா முன்னேற்றம்!

20 ஓவர் போட்டி தரவரிசைப் பட்டியல்: கே.எல்.ராகுல்,ரோகித் சர்மா முன்னேற்றம்!
இருபது ஓவர் போட்டி தரவரிசைப்பட்டியலில் கே.எல் .ராகுல் 2-வது இடத்திற்கும், ரோகித் சர்மா 10-வது இடத்திற்கும் முன்னேற்றம்!
துபாய்

நியூசிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி   5  இருபது ஓவர் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இத்தொடரில், 5 போட்டிகளையும் வென்று தொடரை கைப்பற்றியது இந்திய அணி.

இத்தொடரில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு ஆகியவற்றில் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டது . குறிப்பாக, பேட்டிங்கில் கே.எல்.ராகுல், ரோகித் சர்மா ஆகியோரும், பந்து வீச்சில் பும்ரா, ஸ்ரதுல் தாகூரும் சிறப்பாக  செயல்பட்டனர்.

தொடர் முடிவடைந்த நிலையில் இருபது ஓவர் போட்டிக்கான தரவரிசைப்பட்டியலை ஐசிசி வெளியிட்டு உள்ளது.அதில் கே.எல்.ராகுல் மற்றும் பும்ரா ஆகியோர் முன்னேற்றம் கண்டுள்ளனர். இந்திய அணி கேப்டன் விராட் கோலி 9-வது இடத்திலேயே தொடர்கிறார்.

பேட்டிங்கை பொறுத்தவரை, தரவரிசைப்பட்டியலில் 6-வது இடத்தில் இருந்த கே.எல்.ராகுல் 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். 13-வது இடத்தில் இருந்த ரோகித் சர்மா 10-வது இடத்திற்குள் நுழைந்துள்ளார். 

70-வது இடத்தில் இருந்த மனிஷ் பாண்டே 58-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். 100-வது இடத்திற்கு மேல் இருந்த ஸ்ரேயாஸ் ஐயர் 55-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

பவுலிங்கை பொறுத்தவரை, 37-வது இடத்தில் இருந்த ஜஸ்ப்ரித் பும்ரா 11-வது இடத்தை பிடித்துள்ளார். 40-வது இடத்தில் இருந்த யுவேந்திர சாஹல் 30வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். ஷ்ரதுல் தாகூர் 91-வது இடத்திலிருந்து 57-வது இடத்திற்கும், சைனி 96-வது இடத்திலிருந்து 71-வது இடத்திற்கும், ஜடேஜா 76-வது இடத்திற்கும் முன்னேறியுள்ளனர்.  வாஷிங்டன் சுந்தர் 22-வது இடத்திற்கு முன்னேறி உள்ளார். 

1) பாபர் - 879 புள்ளிகள்
2) ராகுல்- 823
3) ஃபிஞ்ச் - 810
4) முன்ரோ - 785
5) மலன் - 782
6) மேக்ஸ்வெல் - 766
7) லெவிஸ் - 702
8) ஹஸ்ரதுல்லா - 692
9) கோலி - 673
10) ரோகித் - 662

தொடர்புடைய செய்திகள்

1. டோனிக்கு மாற்று விக்கெட் கீப்பராகச் செயல்படுவதில் அதிக அழுத்தங்கள் உள்ளன - கே.எல்.ராகுல்
டோனிக்கு மாற்று விக்கெட் கீப்பராகச் செயல்படுவதில் அதிக அழுத்தங்கள் உள்ளன என கே.எல்.ராகுல் கூறியுள்ளார்.
2. லாக் டவுன்: ரசிகர்களிடம் அறிவுரை கேட்கும் கே.எல்.ராகுல்
கே.எல்.ராகுல் அவருடைய புகைப்படத்தைப் பகிர்ந்து, ரசிகர்களிடம் முடி வெட்ட வேண்டுமா, வேண்டாமா என்று அறிவுரையைக் கேட்டுள்ளார்.
3. 20 ஓவர் கிரிக்கெட்: தொடக்க ஆட்டத்தில் ஆர்.எம்.கே. அணி வெற்றி
சென்னையை அடுத்த கவரைப்பேட்டையில் உள்ள ஆர்.எம்.கே.என்ஜினீயரிங் கல்லூரி சார்பில் 8-வது மஞ்சுளா முனிரத்தினம் நினைவு 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அந்த கல்லூரி மைதானத்தில் நேற்று தொடங்கியது.
4. தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி 20 ஓவர் கிரிக்கெட்: ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி தொடரையும் கைப்பற்றியது
தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 97 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றதுடன் தொடரையும் கைப்பற்றியது.