கிரிக்கெட்

நியூசிலாந்து தொடரில் இருந்து இந்திய வீரர் ரோகித் சர்மா காயத்தால் விலகல் + "||" + காயம் காரணமாக நியூசிலாந்து தொடரில் இருந்து ரோகித் சர்மா விலகல்

நியூசிலாந்து தொடரில் இருந்து இந்திய வீரர் ரோகித் சர்மா காயத்தால் விலகல்

நியூசிலாந்து தொடரில் இருந்து இந்திய வீரர் ரோகித் சர்மா காயத்தால் விலகல்
நியூசிலாந்து தொடரில் இருந்து காயம் காரணமாக இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா விலகி இருக்கிறார்.
புதுடெல்லி,

விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இதில் மவுன்ட்மாங்கானுவில் நேற்று முன்தினம் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதுடன் 5-0 என்ற கணக்கில் தொடரையும் முழுமையாக கைப்பற்றி சாதனை படைத்தது.


கடைசி 20 ஓவர் போட்டியில் விராட்கோலி விளையாடாததால் கேப்டன் பொறுப்பை கவனித்த ரோகித் சர்மா ரன் எடுக்க ஓடுகையில் இடது காலில் தசைப்பிடிப்பு காயம் ஏற்பட்டு வலியால் துடித்தார். அணியின் பிசியோதெரபிஸ்ட் நிதின் பட்டேல் சிகிச்சை அளித்த பிறகு சோதி வீசிய ஒரு பந்தை சிக்சருக்கு தூக்கிய ரோகித் சர்மா (60 ரன்கள், 41 பந்து, 3 பவுண்டரி, 3 சிக்சர்) அடுத்த பந்தை எதிர்கொண்ட போது மீண்டும் வலியின் தாக்கம் அதிகரித்ததால் பெவிலியன் திரும்பினார். அதன் பிறகு அவர் களம் இறங்கவில்லை. கேப்டன் பணியை லோகேஷ் ராகுல் பார்த்தார்.

இதனை அடுத்து இந்திய அணி, நியூசிலாந்துடன் 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. இதில் முதலாவது ஒருநாள் போட்டி ஹாமில்டனில் நாளையும் (புதன்கிழமை), 2-வது ஒருநாள் போட்டி ஆக்லாந்தில் 8-ந் தேதியும், 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி மவுன்ட் மாங்கானுவில் 11-ந் தேதியும் நடக்கிறது. முதலாவது டெஸ்ட் போட்டி வெலிங்டனில் 21-ந் தேதியும், 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கிறைஸ்ட்சர்ச்சில் 29-ந் தேதியும் தொடங்குகிறது.

இந்த நிலையில் காயம் காரணமாக ரோகித் சர்மா நியூசிலாந்துக்கு எதிரான எஞ்சிய தொடரில் விளையாடமாட்டார் என்று இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார். அவரது காயம் குணமடைய எத்தனை நாட்கள் பிடிக்கும் என்ற விவரம் தெரியவில்லை. தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ரோகித் சர்மா போட்டி தொடரில் இருந்து விலகி இருப்பது இந்திய அணிக்கு பெருத்த பின்னடைவாகும்.

ரோகித் சர்மாவுக்கு பதிலாக யார்? அணியில் சேர்க்கப்படுவார் என்பது தெரியவில்லை. ஏற்கனவே தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்த தொடரில் இடம் பெறவில்லை. நியூசிலாந்து ‘ஏ’ அணிக்கு எதிரான தொடரில் விளையாடி வரும் இந்திய ‘ஏ’ அணியில் இடம் பெற்றுள்ள மயங்க் அகர்வால் ஒருநாள் போட்டி அணியிலும், நியூசிலாந்து ‘ஏ’ அணிக்கு எதிரான முதலாவது டெஸ்டில் இரட்டை சதம் அடித்த சுப்மான் கில் டெஸ்ட் போட்டி அணியிலும் சேர்க்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் ஜெய் ஷாவின் அனுமதி கிடைத்ததும் பழைய தேர்வு கமிட்டி மாற்று வீரரை அறிவிக்கும் என்று தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா எதிரொலியால் ஐபிஎல் போட்டிகள் ஒத்திவைப்பு
கொரோனா எதிரொலியால் ஐபிஎல் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. மார்ச் 29 ஆம் தேதிக்கு பதில், ஏப்ரல் 15 ஆம் தேதி தொடங்கும்.
2. வித்தியாசமான ஹேர் ஸ்டைல்: சென்னை வந்த டோனி ; உற்சாக வரவேற்பு
ஐபிஎல் தொடரில் பங்கேற்பதற்காக சென்னை வந்தடைந்த டோனிக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
3. இரு நாடுகளும் வெங்காயம்,தக்காளி வர்த்தகம் செய்ய முடியும் என்றால் ஏன் கிரிக்கெட் விளையாடக்கூடாது -சோயிப் அக்தர்
இரு நாடுகளும் வெங்காயம், தக்காளி வர்த்தகம் செய்ய முடியும் என்றால் , ஏன் கிரிக்கெட் விளையாடக்கூடாது இருதரப்பு கிரிக்கெட் போட்டி குறித்து சோயிப் அக்தர் கேள்வி எழுப்பி உள்ளார்.
4. ஐ.பி.எல். அட்டவணை முழு விவரம் : முதல் ஆட்டத்தில் சென்னை-மும்பை அணிகள் மோதல்
8 அணிகள் பங்கேற்கும் 13-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடருக்கான போட்டி அட்டவணை முழு விவரம் வருமாறு:-
5. இந்தியாவுக்கு கிடைத்த மிகச்சிறந்த கேப்டன் டோனி தான்-சுரேஷ் ரெய்னா புகழாரம்
மகேந்திர சிங் டோனி தான் இந்தியாவுக்கு கிடைத்த சிறந்த கேப்டன் என்று தான் நம்புவதாக சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.