கிரிக்கெட்

20 ஓவர் கிரிக்கெட் பேட்ஸ்மேன் தரவரிசை: இந்திய வீரர் லோகேஷ் ராகுல் 2-வது இடத்துக்கு முன்னேற்றம் + "||" + Top 20 Cricket Batsman Rankings: Indian player Lokesh Rahul jumps to 2nd place

20 ஓவர் கிரிக்கெட் பேட்ஸ்மேன் தரவரிசை: இந்திய வீரர் லோகேஷ் ராகுல் 2-வது இடத்துக்கு முன்னேற்றம்

20 ஓவர் கிரிக்கெட் பேட்ஸ்மேன் தரவரிசை: இந்திய வீரர் லோகேஷ் ராகுல் 2-வது இடத்துக்கு முன்னேற்றம்
20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் பேட்ஸ்மேன் தரவரிசையில் இந்திய வீரர் லோகேஷ் ராகுல் 2-வது இடத்துக்கு முன்னேறி இருக்கிறார்.
துபாய்,

இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான 20 ஓவர் போட்டி தொடர் முடிவை தொடர்ந்து வீரர்களின் தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நேற்று வெளியிட்டது.

இதன்படி பேட்ஸ்மேன் தரவரிசையில் பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம் (879 புள்ளிகள்) முதலிடத்தில் நீடிக்கிறார். நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் 2 அரைசதம் உள்பட 224 ரன்கள் எடுத்த இந்திய வீரர் லோகேஷ் ராகுல் (823 புள்ளிகள்) 4 இடம் முன்னேறி முதல்முறையாக 2-வது இடத்தை பிடித்துள்ளார். அவரது சிறந்த தரவரிசை இதுவாகும். ஆஸ்திரேலிய வீரர் ஆரோன் பிஞ்ச் (810 புள்ளிகள்) ஒரு இடம் சறுக்கி 3-வது இடத்தை பெற்றுள்ளார். நியூசிலாந்து வீரர் காலின் முன்ரோ (785 புள்ளிகள்) 4-வது இடத்தில் தொடருகிறார். இங்கிலாந்து வீரர் டேவிட் மாலன் (782 புள்ளிகள்) 2 இடம் சரிந்து 5-வது இடத்தையும், ஆஸ்திரேலியாவின் மேக்ஸ்வெல் ஒரு இடம் சறுக்கி 6-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.


வெஸ்ட்இண்டீஸ் வீரர் இவின் லீவிஸ் 7-வது இடத்திலும், ஆப்கானிஸ்தான் வீரர் ஹசரத்துல்லா ஜஜாய் 8-வது இடத்திலும், இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி 9-வது இடத்திலும் மாற்றமின்றி தொடருகின்றனர். இந்திய தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா 3 இடங்கள் முன்னேறி 10-வது இடத்தை அபகரித்துள்ளார். இந்திய வீரர்கள் ஸ்ரேயாஸ் அய்யர் 63 இடங்கள் முன்னேறி 55-வது இடத்தையும், மனிஷ் பாண்டே 12 இடங்கள் ஏற்றம் கண்டு 58-வது இடத்தையும் பிடித்து இருக்கிறார்கள். நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் 7 இடங்கள் முன்னேறி 16-வது இடத்தையும், டிம் செய்பெர்ட் 43 இடங்கள் உயர்ந்து 34-வது இடத்தையும், ராஸ் டெய்லர் 11 இடங்கள் முன்னேறி 39-வது இடத்தையும் பெற்றுள்ளனர்.

பந்து வீச்சாளர் தரவரிசையில் ஆப்கானிஸ்தான் வீரர்கள் ரஷித் கான், முஜீப் ரஹ்மான் முறையே முதல் 2 இடத்திலும், நியூசிலாந்து வீரர் மிட்செல் சான்ட்னெர் 3-வது இடத்திலும் நீடிக்கின்றனர். ஆஸ்திரேலிய வீரர் ஆடம் ஜம்பா ஒரு இடம் உயர்ந்து 4-வது இடத்தையும், பாகிஸ்தான் வீரர் இமாத் வாசிம் ஒரு இடம் சரிந்து 5-வது இடத்தையும் பெற்றுள்ளனர். தென்ஆப்பிரிக்காவின் பெலக்வாயோ, இங்கிலாந்தின் அடில் ரஷித், பாகிஸ்தானின் ஷதாப் கான், ஆஸ்திரேலியாவின் ஆஷ்டன் அகர், இங்கிலாந்தின் கிறிஸ் ஜோர்டான் முறையே 6 முதல் 10 இடங்களில் தொடருகின்றனர்.

இந்திய பவுலர்கள் ஜஸ்பிரித் பும்ரா 26 இடம் முன்னேறி 11-வது இடத்தையும், யுஸ்வேந்திர சாஹல் 10 இடம் உயர்ந்து 30-வது இடத்தையும், ஷர்துல் தாகூர் 34 இடங்கள் அதிகரித்து 57-வது இடத்தையும், நவ்தீப் சைனி 25 இடம் முன்னேறி 71-வது இடத்தையும், ரவீந்திர ஜடேஜா 34 இடம் உயர்ந்து 76-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.


தொடர்புடைய செய்திகள்

1. ஒரு நாள் கிரிக்கெட்: பேட்ஸ்மேன் தரவரிசையில் விராட்கோலி தொடர்ந்து முதலிடம்
ஒரு நாள் கிரிக்கெட் போட்டியின் பேட்ஸ்மேன் தரவரிசையில் விராட்கோலி தொடர்ந்து முதலிடம் வகிக்கிறார்.
2. 20 ஓவர் கிரிக்கெட்: தொடக்க ஆட்டத்தில் ஆர்.எம்.கே. அணி வெற்றி
சென்னையை அடுத்த கவரைப்பேட்டையில் உள்ள ஆர்.எம்.கே.என்ஜினீயரிங் கல்லூரி சார்பில் 8-வது மஞ்சுளா முனிரத்தினம் நினைவு 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அந்த கல்லூரி மைதானத்தில் நேற்று தொடங்கியது.
3. தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி 20 ஓவர் கிரிக்கெட்: ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி தொடரையும் கைப்பற்றியது
தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 97 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றதுடன் தொடரையும் கைப்பற்றியது.