கிரிக்கெட்

நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி: இந்திய அணி முதலில் பேட்டிங் + "||" + Mayank, Shaw to debut as NZ opt to bowl

நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி: இந்திய அணி முதலில் பேட்டிங்

நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி:  இந்திய அணி முதலில் பேட்டிங்
இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
ஹாமில்டன்,

விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் போட்டி தொடரை இந்திய அணி 5-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றி வரலாறு படைத்தது.

இதனை அடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஹாமில்டனில் இன்று நடைபெற்று வருகிறது.  முன்னதாக இப்போட்டியில் டாஸ் வென்ற  நியூசிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.  20 ஓவர் போட்டி தொடரில் இந்திய அணியினர் ஆதிக்கம் செலுத்தியது போல் ஒருநாள் போட்டி தொடரிலும் இந்திய அணியின் ஆதிக்கம் தொடருமா? என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

இரு அணிகளிலும் இடம் பெற்றுள்ள வீரர்கள் விவரம் வருமாறு ;

இந்தியா ;

பிரித்வி ஷா,  மயங்க் அகர்வால், விராட் கோலி (கேப்டன்), ஷ்ரேயாஸ் ஐயர், லோகேஷ் ராகுல் (விக்கெட் கீப்பர்), கேதர் ஜாதவ், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாகூர், முகம்மது சமி, குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா,

நியூசிலாந்து;

 மார்டின் குப்தில், ஹென்ரி நிகோலஸ், டாம் லாதம் (விக்கெட் கீப்பர்),டோம் ப்ளண்டெல், ரோஸ் டெய்லர், ஜேம்ஸ் நீஷம், கோலின் டி கிராண்ட்ஹோம், மிட்செல் சாண்ட்னர், டிம் சவுதி, இஷ் சோதி, ஹமிஷி பென்னெட்

தொடர்புடைய செய்திகள்

1. இந்தியாவில் கொரோனா தடுப்பூசி கண்டறியும் பணியில் 30 குழுக்கள்
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி கண்டறியும் பணியில் 30 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன என்று முதன்மை அறிவியல் ஆலோசகர் கே விஜயராகவன் தெரிவித்துள்ளார்.
2. "இந்தியாவை தட்டி கேட்க வேண்டிய நேரம் வந்துவிட்டது" சீனாவுக்கு ஆதரவாக பாகிஸ்தான் கருத்து
இந்தியாவிற்கும், சீனாவிற்கு இடையே நடக்கும் மோதலால் பெரிய ஆபத்து வரப் போவதாக பாகிஸ்தான் முதல் முறையாக கருத்து தெரிவித்துள்ளது.
3. இந்தியாவில் கொரோனா பாதிப்பு 1.51 லட்சமாக உயர்வு: 24 மணி நேரத்தில் 6,387 பேருக்கு தொற்று
இந்தியாவில் கொரோனா பாதிப்புக்கு ஆளானோர் எண்ணிக்கை 1.51 லட்சமாக உயர்ந்தது. 24 மணிநேரத்தில் 6,387 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.
4. இந்தியாவில் கொரோனா பாதிப்பு 1,45,380 ஆக உயர்வு: பலி எண்ணிக்கை 4,167 ஆனது
இந்தியாவில் தொடர்ந்து 5-வது நாளாக 6 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு நோய்த்தொற்று உறுதியாகி உள்ளது. நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,45,380 ஆகவும், பலி எண்ணிக்கை 4,167 ஆகவும் உயர்ந்துள்ளது.
5. இந்தியாவில் 2 மாதங்களுக்கு பிறகு விமான போக்குவரத்து தொடங்கியது: 630 விமானங்கள் ரத்தானதால் பயணிகள் அவதி
இந்தியாவில் 2 மாதங்களுக்கு பிறகு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் நேற்று விமான போக்குவரத்து தொடங்கியது. முதல் நாளிலேயே 630 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இதனால் பயணிகள் அவதிப்பட்டனர்.