கிரிக்கெட்

இந்திய அணியின் உத்வேகத்தை லாதம் ஆட்டம் பறித்து விட்டது - விராட் கோலி + "||" + Latham has played the inspiration for the Indian team - Virat Kohli

இந்திய அணியின் உத்வேகத்தை லாதம் ஆட்டம் பறித்து விட்டது - விராட் கோலி

இந்திய அணியின் உத்வேகத்தை லாதம் ஆட்டம் பறித்து விட்டது - விராட் கோலி
இந்திய அணியின் உத்வேகத்தை லாதம் ஆட்டம் பறித்து விட்டதாக இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்தார்.
ஹாமில்டன்,

தோல்விக்கு பிறகு இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி அளித்த பேட்டியில், ‘இந்த போட்டியில் நியூசிலாந்து அணி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 348 ரன்கள் இலக்கு வெற்றிக்கு போதுமானது என்று நாங்கள் நினைத்தோம். ராஸ் டெய்லர் அனுபவம் வாய்ந்த பேட்ஸ்மேன். டாம் லாதமின் ஆட்டம் உத்வேகத்தை எங்களிடம் இருந்து பறித்து விட்டது. இந்த வெற்றியின் எல்லா பெருமையும் ராஸ் டெய்லர் மற்றும் லாதமையே சாரும். ஒரு கேட்ச் வாய்ப்பை நாங்கள் தவற விட்டோம். இருப்பினும் பீல்டிங்கில் நாங்கள் நன்றாகவே செயல்பட்டோம். எதிர்மறை விஷயங்கள் குறித்து அதிகம் கவனம் செலுத்தமாட்டோம். இந்த ஆட்டத்தில் எதிரணியினர் எங்களை விட சிறப்பாக செயல்பட்டனர். அவர்கள் வெற்றிக்கு தகுதியானவர்கள். அறிமுக தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் நல்ல தொடக்கத்தை அளித்தனர். இதனை அவர்கள் தொடர்ந்து அளிப்பார்கள் என்று நம்புகிறேன். நெருக்கடியான சூழ்நிலையிலும் ஸ்ரேயாஸ் அய்யர் முதல் சதத்தை எட்டியது சிறப்பானதாகும். லோகேஷ் ராகுல் மீண்டும் நன்றாக விளையாடினார். இவை எங்களுக்கு நல்ல அறிகுறியாகும்’ என்று தெரிவித்தார்.


வெற்றிக்கு பிறகு நியூசிலாந்து அணியின் பொறுப்பு கேப்டன் டாம் லாதம் கருத்து தெரிவிக்கையில், ‘எங்கள் அணி வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். தடுமாற்றத்தை சந்தித்தாலும் வெற்றி இலக்கை எட்டிப்பிடித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. நாங்கள் விரும்பியதை விட வெற்றி இலக்கு சற்று அதிகமானதாக தான் அமைந்தது. நல்ல தொடக்கம் அமைந்ததாலும், விக்கெட் கைவசம் இருந்ததாலும் அதனை சமாளித்து விட்டோம். பொறுமையுடன் செயல்பட்டு பார்ட்னர்ஷிப் ஆட்டத்தை பலப்படுத்தியது நாங்கள் வெற்றி இலக்கை எட்டிப்பிடிக்க முக்கிய காரணமாகும். ராஸ் டெய்லர் ஆட்டம் அருமையாக இருந்தது. அடுத்த ஆட்டத்தில் நாங்கள் இன்னும் நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம் என நம்புகிறேன்’ என்றார்.


தொடர்புடைய செய்திகள்

1. ‘இந்திய அணியின் பயிற்சி முகாமை பெங்களூருவில் இருந்து மாற்ற முடியாது’ - ஆக்கி இந்தியா அறிவிப்பு
கொரோனா பாதிப்பால் ‘சாய்’ சமையல்காரர் மரணம் அடைந்தாலும் இந்திய ஆக்கி அணியின் பயிற்சி முகாமை பெங்களூருவில் இருந்து மாற்ற முடியாது என்று ஆக்கி இந்தியா அமைப்பு அறிவித்துள்ளது.
2. இந்திய அணியில் இருந்து சுரேஷ் ரெய்னா ஓரங்கட்டப்பட்டது ஏன்? - முன்னாள் தேர்வு குழு தலைவர் விளக்கம்
இந்திய அணியில் இருந்து சுரேஷ் ரெய்னா ஓரங்கட்டப்பட்டது ஏன்? என்பது குறித்து முன்னாள் தேர்வு குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் விளக்கம் அளித்துள்ளார்.
3. இந்திய அணியில் டோனிக்கு பிடித்தமான வீரராக ரெய்னா இருந்தார் - யுவராஜ்சிங்
இந்திய கிரிக்கெட் அணியில் டோனிக்கு பிடித்தமான வீரராக ரெய்னா இருந்தார் என்று யுவராஜ்சிங் கூறியுள்ளார்.
4. நான் விளையாடிய காலத்தில் இந்திய அணியின் சீனியர் வீரர்கள் மிகவும் ஒழுக்கமாக நடந்து கொண்டனர் - யுவராஜ்சிங் பெருமிதம்
நான் விளையாடிய காலத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் சீனியர் வீரர்கள் மிகவும் ஒழுக்கமாக நடந்து கொண்டனர் என்று முன்னாள் ஆல்-ரவுண்டர் யுவராஜ்சிங் தெரிவித்தார்.
5. ‘இந்திய அணி குறைந்த ரன்னில் சரண் அடைந்தது ஆச்சரியம் அளித்தது’ -கேரி ஸ்டீட்
இந்திய அணி இரண்டு இன்னிங்சிலும் குறைந்த ஸ்கோரில் (165 ரன் மற்றும் 191 ரன்) சுருண்டது எனக்கே கொஞ்சம் ஆச்சரியமாகத் தான் இருந்தது.