பெண்கள் முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட்: இந்தியா-இங்கிலாந்து அணிகள் இன்று மோதல்


பெண்கள் முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட்: இந்தியா-இங்கிலாந்து அணிகள் இன்று மோதல்
x
தினத்தந்தி 7 Feb 2020 12:02 AM GMT (Updated: 7 Feb 2020 12:02 AM GMT)

ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து ஆகிய பெண்கள் அணிகள் இடையிலான 20 ஓவர் கிரிக்கெட் போட்டித் தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும், மற்ற அணியுடன் தலா இரண்டு முறை மோத வேண்டும்.

மெல்போர்ன்,

லீக் முடிவில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும். இதில் மெல்போர்னில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறும் 4-வது லீக் ஆட்டத்தில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி முதலாவது ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது. அடுத்த ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவிடம் பணிந்தது.

அதே சமயம் தனது தொடக்க ஆட்டத்தில் இந்தியாவிடம் வீழ்ந்த ஹீதர் நைட் தலைமையிலான இங்கிலாந்து அணி 2-வது ஆட்டத்தில் சூப்பர் ஓவரில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி அதிர்ச்சி அளித்தது. முந்தைய ஆட்டத்தில் இந்திய அணியில் மந்தனா (35 ரன்கள்), ஹர்மன்பிரீத் கவுர் (28 ரன்கள்) தவிர யாரும் பேட்டிங்கில் ஜொலிக்கவில்லை. பந்து வீச்சு பாராட்டும் வகையில் இருந்தது. பேட்டிங்கில் இந்திய அணி எழுச்சி பெற்றால் தான் இங்கிலாந்து அணியை மீண்டும் சாய்த்து, இறுதிப்போட்டி வாய்ப்பை பிரகாசப்படுத்திக் கொள்ள முடியும். இந்திய நேரப்படி காலை 8.40 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை சோனி டென்3 சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.

Next Story