முழங்கையில் காயத்தால் பாதிப்பு: ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இருந்து ஜோப்ரா ஆர்ச்சர் விலகல்


முழங்கையில் காயத்தால் பாதிப்பு: ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இருந்து ஜோப்ரா ஆர்ச்சர் விலகல்
x
தினத்தந்தி 7 Feb 2020 12:13 AM GMT (Updated: 7 Feb 2020 12:13 AM GMT)

அதிவேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர், தென்ஆப்பிரிக்க டெஸ்ட் தொடரின் போது வலது முழங்கையில் வலியால் அவதிப்பட்டார். இதனால் அந்த தொடரில் பாதியிலேயே விலகினார்.

லண்டன்,

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் அதிவேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர், தென்ஆப்பிரிக்க டெஸ்ட் தொடரின் போது வலது முழங்கையில் வலியால் அவதிப்பட்டார். இதனால் அந்த தொடரில் பாதியிலேயே விலகினார். ஸ்கேன் பரிசோதனையில் அழுத்தத்தினால் முழங்கையில் எலும்பு முறிவு ஏற்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது. காயம் குணமடைய 3 மாதங்கள் வரை ஆகும். இதனால் இலங்கை டெஸ்ட் தொடர் மற்றும் அடுத்த மாதம் இறுதியில் தொடங்கும் ஐ.பி.எல். 20 ஓவர் போட்டிகள் ஆகியவற்றில் இருந்து ஆர்ச்சர் விலகியுள்ளார். ஐ.பி.எல்.-ல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் அங்கம் வகித்த ஜோப்ரா ஆர்ச்சருக்கு பதிலாக மாற்று வீரர் விரைவில் அறிவிக்கப்படுவார். ஜூன் மாதம் நடக்கும் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்குள் ஜோப்ரா ஆர்ச்சர் காயத்தில் இருந்து மீண்டு முழுமையாக தயாராகி விடுவார் என்று அந்த அணியின் மருத்துவ குழு தெரிவித்துள்ளது.

24 வயதான ஜோப்ரா ஆர்ச்சர் இங்கிலாந்து அணிக்காக 7 டெஸ்டில் 30 விக்கெட்டுகளும், 14 ஒரு நாள் போட்டிகளில் 23 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளார். ஐ.பி.எல்.-ல் 21 ஆட்டங்களில் பங்கேற்று 26 விக்கெட்டுகள் கைப்பற்றி இருக்கிறார்.

Next Story