கிரிக்கெட்

வங்காளதேசத்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட்: பாகிஸ்தான் அணி இன்னிங்ஸ் வெற்றி + "||" + Against Bangladesh The first is Test cricket Pakistan won by an innings

வங்காளதேசத்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட்: பாகிஸ்தான் அணி இன்னிங்ஸ் வெற்றி

வங்காளதேசத்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட்: பாகிஸ்தான் அணி இன்னிங்ஸ் வெற்றி
பாகிஸ்தான்-வங்காளதேச அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ராவல்பிண்டியில் நடந்தது.
ராவல்பிண்டி,

முதல் இன்னிங்சில் முறையே வங்காளதேச அணி 233 ரன்னும், பாகிஸ்தான் அணி 445 ரன்னும் எடுத்தன. 212 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய வங்காளதேச அணி 3-வது நாள் ஆட்டம் முடிவில் 45 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 126 ரன்கள் எடுத்து இருந்தது. கேப்டன் மொமினுல் ஹக் 37 ரன்னுடனும், லிட்டான் தாஸ் ரன் எதுவும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர். நேற்று 4-வது நாள் ஆட்டம் நடந்தது. தொடர்ந்து ஆடிய வங்காளதேச அணியின் விக்கெட்டுகள் வேகமாக சரிந்தன. மொமினுல் ஹக் 41 ரன்னிலும், ருபெல் ஹூசைன் 5 ரன்னிலும், லிட்டான் தாஸ் 29 ரன்னிலும், அபு ஜெயத் 3 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். வங்காளதேச அணி 2-வது இன்னிங்சில் 62.2 ஓவர்களில் 168 ரன்னில் ‘ஆல்-அவுட்’ ஆனது. இதனால் பாகிஸ்தான் அணி இன்னிங்ஸ் மற்றும் 44 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பாகிஸ்தான் அணி தரப்பில் நசீம் ஷா, யாசிர் ஷா தலா 4 விக்கெட் வீழ்த்தினார்கள். ‘ஹாட்ரிக்’ உள்பட மொத்தம் 5 விக்கெட்டுகள் வீழ்த்திய 16 வயதான பாகிஸ்தான் வீரர் நசீம் ஷா ஆட்டநாயகன் விருது பெற்றார். இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் அணிக்கு 60 புள்ளிகள் கிடைத்தது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் பாகிஸ்தான் அணி மொத்தம் 140 புள்ளிகளுடன் 4-வது இடத்தில் உள்ளது. இந்திய அணி 360 புள்ளிகளுடன் முதலிடத்திலும், ஆஸ்திரேலிய அணி 296 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், இங்கிலாந்து அணி 146 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும் இருக்கின்றன. 3-வது ஆட்டத்தில் ஆடிய வங்காளதேச அணி இன்னும் புள்ளி கணக்கை தொடங்கவில்லை.