கிரிக்கெட்

இந்தியா-நியூசிலாந்து ‘ஏ’ அணிகள் இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது ரஹானே சதம் அடித்தார் + "||" + India New Zealand A Between teams Last Test match

இந்தியா-நியூசிலாந்து ‘ஏ’ அணிகள் இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது ரஹானே சதம் அடித்தார்

இந்தியா-நியூசிலாந்து ‘ஏ’ அணிகள் இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது ரஹானே சதம் அடித்தார்
இந்தியா ‘ஏ’-நியூசிலாந்து ‘ஏ’ அணிகள் இடையிலான அதிகாரபூர்வமற்ற 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லின்கானில் நடந்தது.
லின்கான்,

முதலில் ஆடிய நியூசிலாந்து ‘ஏ’ அணி முதல் இன்னிங்சில் 9 விக்கெட் இழப்புக்கு 386 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. டேரில் மிட்செல் 103 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். முன்னதாக மழை காரணமாக 2-வது நாள் ஆட்டம் நடைபெறவில்லை. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய ‘ஏ’ அணி 3-வது நாள் ஆட்டம் முடிவில் 53 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 234 ரன்கள் எடுத்து இருந்தது. சுப்மான் கில் 107 ரன்னுடனும், புஜாரா 52 ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர். நேற்று 4-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடந்தது. தொடர்ந்து ஆடிய புஜாரா 53 ரன்னிலும், சுப்மான் கில் 136 ரன்னிலும், விஜய் சங்கர் 66 ரன்னிலும், விக்கெட் கீப்பர் சிகார் பரத் 22 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். முதல் இன்னிங்சில் இந்திய ‘ஏ’ அணி 109.3 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 467 ரன்கள் எடுத்து இருந்த நிலையில் போட்டி டிராவில் முடித்து கொள்ளப்பட்டது. சதம் அடித்த ரஹானே 101 ரன்னுடனும், ஆர்.அஸ்வின் 1 ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர். முதலாவது டெஸ்ட் போட்டியும் டிராவில் முடிந்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.தொடர்புடைய செய்திகள்

1. இந்தியாவில் கொரோனா தொற்றில் இருந்து ஒரே நாளில் 11 ஆயிரம் பேர் குணம் அடைந்தனர்
இந்தியாவில் ஒரே நாளில் கொரோனா தொற்றில் இருந்து 11 ஆயிரத்து 200-க்கும் அதிகமானோர் குணம் அடைந்து, வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
2. வரலாற்று முக்கிய முடிவுகளை எடுத்து இந்தியா கடந்த ஓராண்டு காலத்தில் வேகமான முன்னேற்றம் - பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்
வரலாற்று முக்கிய முடிவுகளை எடுத்து, இந்தியா கடந்த ஓராண்டு காலத்தில் வேகமான முன்னேற்றம் கண்டுள்ளதாக மக்களுக்கு எழுதிய கடிதத்தில் பிரதமர் நரேந்திர மோடி பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார்.
3. இந்தியாவில் கொரோனா தடுப்பூசி கண்டறியும் பணியில் 30 குழுக்கள்
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி கண்டறியும் பணியில் 30 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன என்று முதன்மை அறிவியல் ஆலோசகர் கே விஜயராகவன் தெரிவித்துள்ளார்.
4. "இந்தியாவை தட்டி கேட்க வேண்டிய நேரம் வந்துவிட்டது" சீனாவுக்கு ஆதரவாக பாகிஸ்தான் கருத்து
இந்தியாவிற்கும், சீனாவிற்கு இடையே நடக்கும் மோதலால் பெரிய ஆபத்து வரப் போவதாக பாகிஸ்தான் முதல் முறையாக கருத்து தெரிவித்துள்ளது.
5. இந்தியாவில் கொரோனா பாதிப்பு 1.51 லட்சமாக உயர்வு: 24 மணி நேரத்தில் 6,387 பேருக்கு தொற்று
இந்தியாவில் கொரோனா பாதிப்புக்கு ஆளானோர் எண்ணிக்கை 1.51 லட்சமாக உயர்ந்தது. 24 மணிநேரத்தில் 6,387 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.