கிரிக்கெட்

இந்தியாவுக்கு கிடைத்த மிகச்சிறந்த கேப்டன் டோனி தான்-சுரேஷ் ரெய்னா புகழாரம் + "||" + MS Dhoni best captain India ever had: Suresh Raina

இந்தியாவுக்கு கிடைத்த மிகச்சிறந்த கேப்டன் டோனி தான்-சுரேஷ் ரெய்னா புகழாரம்

இந்தியாவுக்கு கிடைத்த மிகச்சிறந்த கேப்டன் டோனி தான்-சுரேஷ் ரெய்னா புகழாரம்
மகேந்திர சிங் டோனி தான் இந்தியாவுக்கு கிடைத்த சிறந்த கேப்டன் என்று தான் நம்புவதாக சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.
சென்னை

 2019 கிரிக்கெட் உலகக் கோப்பையின் அரையிறுதியில் நியூசிலாந்திடம் இந்தியா தோல்வியடைந்ததில் இருந்து, இந்திய அணியின் விக்கெட் கீப்பர் எம்.எஸ். டோனி எந்த சர்வதேச போட்டியிலும் விளையாடவில்லை. 

 டோனி  நடக்க உள்ள ஐபிஎல் 2020 தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாட உள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரெய்னாவும்  இடம் பெற்று உள்ளார்.

ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் சேனலில் வரும் "தி சூப்பர் கிங்ஸ் நிகழ்ச்சி"யில் கலந்து கொண்டு பேசிய சுரேஷ் ரெய்னா கூறியதாவது:-

எதையும் செய்ய முடியும் என இந்திய அணியை மாற்றிய சிறந்த கேப்டன் எங்களிடம் இருக்கிறார் என்று நான் நினைக்கிறேன். இந்தியாவுக்கு கிடைத்த மிகச்சிறந்த கேப்டன் டோனி தான் .

இந்த சீசனில் சென்னை சூப்ப்ர் கிங்ஸ் தங்கள் சொந்த மைதானத்தில் விளையாடும்போது அரங்கம் முழுவதும் நிரம்பி இருக்கும். இப்போது எங்களுக்கு அதிகமான ரசிகர்கள் இருக்கிறார்கள். இதனால் களத்தில் அதிக ஆற்றல் இருக்கும்.

இந்த ஆண்டு எங்கள் அணியில் நிறைய புதிய திறமைசாலிகள் உள்ளனர். பியூஷ் இருக்கிறார், பின்னர் எங்களிடம் ஹேசல்வுட், சாம் குர்ரான், தமிழ்நாட்டைச் சேர்ந்த சாய் கிஷோர் ஆகியோர் உள்ளனர். சாய் கிஷோர்  அருமையாக பந்து வீசுகிறார். இது எங்கள் அணிக்கு மிகவும் நல்லது. நாங்கள் இளைஞர்கள் மற்றும் மூத்த வீரர்கள் அடங்கிய கலவை அணியை வைத்துள்ளோம். என கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா எதிரொலியால் ஐபிஎல் போட்டிகள் ஒத்திவைப்பு
கொரோனா எதிரொலியால் ஐபிஎல் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. மார்ச் 29 ஆம் தேதிக்கு பதில், ஏப்ரல் 15 ஆம் தேதி தொடங்கும்.
2. வித்தியாசமான ஹேர் ஸ்டைல்: சென்னை வந்த டோனி ; உற்சாக வரவேற்பு
ஐபிஎல் தொடரில் பங்கேற்பதற்காக சென்னை வந்தடைந்த டோனிக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
3. இரு நாடுகளும் வெங்காயம்,தக்காளி வர்த்தகம் செய்ய முடியும் என்றால் ஏன் கிரிக்கெட் விளையாடக்கூடாது -சோயிப் அக்தர்
இரு நாடுகளும் வெங்காயம், தக்காளி வர்த்தகம் செய்ய முடியும் என்றால் , ஏன் கிரிக்கெட் விளையாடக்கூடாது இருதரப்பு கிரிக்கெட் போட்டி குறித்து சோயிப் அக்தர் கேள்வி எழுப்பி உள்ளார்.
4. ஐ.பி.எல். அட்டவணை முழு விவரம் : முதல் ஆட்டத்தில் சென்னை-மும்பை அணிகள் மோதல்
8 அணிகள் பங்கேற்கும் 13-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடருக்கான போட்டி அட்டவணை முழு விவரம் வருமாறு:-
5. ஆஸ்திரேலிய வீராங்கனை சவாலை ஏற்று ஒரு ஓவர் பேட்டிங் செய்யும் சச்சின்
கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்றுவிட்ட சச்சின் தெண்டுல்கர், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீராங்கனை எல்லிஸ் பெர்ரியின் சவாலை ஏற்று, ஒரே ஒரு ஓவர் மட்டுமே ஆட உள்ளார்.

ஆசிரியரின் தேர்வுகள்...