கிரிக்கெட்

இந்தியா-நியூசிலாந்து லெவன் அணிகள் மோதும் பயிற்சி ஆட்டம் இன்று தொடங்குகிறது + "||" + India-New Zealand Eleven teams clash Training game Starting today

இந்தியா-நியூசிலாந்து லெவன் அணிகள் மோதும் பயிற்சி ஆட்டம் இன்று தொடங்குகிறது

இந்தியா-நியூசிலாந்து லெவன் அணிகள் மோதும் பயிற்சி ஆட்டம் இன்று தொடங்குகிறது
ஒருநாள் போட்டி தொடரில் இந்திய அணி 0-3 என்ற கணக்கில் தோல்வி கண்டு பெருத்த ஏமாற்றம் அளித்தது. அடுத்து இவ்விரு அணிகள் இடையே 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடர் நடைபெறுகிறது.
ஹாமில்டன்,

இந்திய கிரிக்கெட் அணி, நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. நியூசிலாந்துக்கு எதிரான 20 ஓவர் போட்டி தொடரை இந்திய அணி 5-0 என்ற கணக்கில் கைப்பற்றி சாதனை படைத்தது. ஆனால் 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் இந்திய அணி 0-3 என்ற கணக்கில் தோல்வி கண்டு பெருத்த ஏமாற்றம் அளித்தது. அடுத்து இவ்விரு அணிகள் இடையே 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடர் நடைபெறுகிறது. இதில் முதலாவது டெஸ்ட் போட்டி வெலிங்டனில் 21-ந் தேதியும், 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கிறைஸ்ட்சர்ச்சில் 29-ந் தேதியும் தொடங்குகிறது.


இந்த நிலையில் விராட்கோலி தலைமையிலான இந்திய அணி, டேரில் மிட்செல் தலைமையிலான நியூசிலாந்து லெவன் அணியுடன் 3 நாள் பயிற்சி ஆட்டத்தில் மோதுகிறது. இந்த ஆட்டம் ஹாமில்டனில் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் 16-ந் தேதி வரை நடக்கிறது. இந்திய நேரப்படி அதிகாலை 3.30 மணிக்கு இந்த போட்டி தொடங்குகிறது. இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்குவதில் மயங்க் அகர்வால், பிரித்வி ஷா, சுப்மான் கில் ஆகியோர் இடையே போட்டி நிலவுகிறது. இவர்களில் யாரை தொடக்க வீரராக இறக்கலாம் என்பதை அடையாளம் காண இந்த போட்டி உதவும். அணியில் இடத்தை உறுதி செய்ய இந்த போட்டி அடிப்படையாக இருக்கும் என்பதால் எல்லா வீரர்களும் தங்களது முழு திறமையையும் வெளிப்படுத்த முயற்சிப்பார்கள். வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா நியூசிலாந்து ஒருநாள் தொடரில் சோபிக்கவில்லை. எனவே அவர் மீண்டும் தனது திறமையை நிரூபிக்க இந்த போட்டியை பயன்படுத்தி கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நியூசிலாந்து லெவன் அணியில் ஜேம்ஸ் நீஷம், ஸ்காட் குஜ்ஜெலின், டிம் செய்பெர்ட், சோதி, பிளைர் டிக்னெர் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர். உள்ளூர் மைதானத்தில் நியூசிலாந்து லெவன் அணி, இந்திய அணிக்கு சவால் அளிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

தொடர்புடைய செய்திகள்

1. இந்தியாவில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 25 ஆக அதிகரிப்பு
இந்தியாவில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 25 ஆக அதிகரித்துள்ளது.
2. இந்தியாவில் கொரோனா சவால்களை சந்திக்க ஏற்பாடுகள் தயார்; பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஆயிரத்தை நெருங்குகிறது
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஆளானோரின் எண்ணிக்கை ஆயிரத்தை நெருங்குகிறது. இனி வரும் சவால்களை சந்திக்க ஏற்பாடுகள் தயாராகின்றன.
3. இந்தியாவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 724 ஆக அதிகரிப்பு
இந்தியாவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 724 ஆக அதிகரித்துள்ளது.
4. தமிழர் உள்பட 10 பேர் பலி: இந்தியாவில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 600-ஐ தாண்டியது
இந்தியாவில் கொரோனாவால் பலியானவர் எண்ணிக்கை 10 ஆகியிருக்கும் நிலையில், தொற்று பாதித்தவர் எண்ணிக்கையும் 600-ஐ தாண்டி உள்ளது.
5. இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 562 ஆக உயர்வு
இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 562 ஆக உயர்ந்துள்ளது.