கிரிக்கெட்

பெண்கள் கிரிக்கெட் தரவரிசையில் மந்தனா முன்னேற்றம் + "||" + In womens cricket rankings Mantana Progress

பெண்கள் கிரிக்கெட் தரவரிசையில் மந்தனா முன்னேற்றம்

பெண்கள் கிரிக்கெட் தரவரிசையில் மந்தனா முன்னேற்றம்
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) பெண்களுக்கான 20 ஓவர் போட்டி வீராங்கனைகளின் புதிய தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது.
துபாய்,

பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் இந்திய அதிரடி வீராங்கனை ஸ்மிர்தி மந்தனா 3 இடம் உயர்ந்து 4-வது இடத்தை பிடித்துள்ளார். சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் நடந்த முத்தரப்பு தொடரில் இரண்டு அரைசதங்கள் அடித்ததன் மூலம் இந்த ஏற்றம் கிடைத்துள்ளது. நியூசிலாந்து வீராங்கனை சுசி பேட்ஸ் முதலிடத்தில் நீடிக்கிறார். இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 9-வது இடம் வகிக்கிறார். பந்து வீச்சாளர்களின் தரவரிசையில் இந்திய வீராங்கனை பூனம் யாதவ் 6 இடங்கள் குறைந்து 12-வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.