கிரிக்கெட்

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2வது 20-வது ஓவர் கிரிக்கெட்: இங்கிலாந்து திரில் வெற்றி + "||" + England win thriller to square series

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2வது 20-வது ஓவர் கிரிக்கெட்: இங்கிலாந்து திரில் வெற்றி

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2வது 20-வது ஓவர் கிரிக்கெட்: இங்கிலாந்து திரில் வெற்றி
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2வது 20-வது ஓவர் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி திரில் வெற்றி பெற்றது.
டர்பன்,

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டர்பனில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் பந்துவீசியது. 

இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் ஜேசன் ராய் 40 ரன்கள் விளாச, இறுதியில் ஸ்டோக்ஸ் 47 ரன்களும், மோயின் அலி 11 பந்துகளில் 39 ரன்களும் குவித்தனர். இதனால், 20 ஓவர் முடிவில் இங்கிலாந்து அணி 7 விக்கெட் இழப்பிற்கு 204 ரன்கள் எடுத்தது. 

இதையடுத்து பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 202 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இதனால், 2 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றியை ருசித்தது.

3- போட்டிகள் கொண்ட 20 ஓவர் கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்றது. இதனால் 1-1 என்ற கணக்கில் தொடர் சமநிலையில் உள்ளது. கோப்பையை தீர்மானிக்கும் 3-வது இருபது ஓவர் கிரிக்கெட் போட்டி, நாளை (ஞாயிற்றுக்கிழமை) செஞ்சூரியனில் நடைபெறுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

1. தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்ட்: இந்திய அணி 601 ரன்கள் குவித்து ‘டிக்ளேர்’
தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 601 ரன்கள் குவித்து ‘டிக்ளேர்’ செய்தது. கேப்டன் விராட் கோலி 254 ரன்கள் விளாசி அசத்தினார்.