இன்ஸ்டாகிராமில் 50 மில்லியன் பாலோயர்ஸ் பெற்ற முதல் இந்திய பிரபலம் விராட் கோலி !


விராட் கோலி ( Photo Credit ; AFP)
x
விராட் கோலி ( Photo Credit ; AFP)
தினத்தந்தி 18 Feb 2020 4:53 AM GMT (Updated: 18 Feb 2020 4:53 AM GMT)

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி இன்ஸ்டாகிராமில் 50 மில்லியன் பின் தொடர்பவர்களை பெற்றுள்ளார்.

புதுடெல்லி, 

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, சமூக வலைத்தளங்களில் துடிப்பாக இயங்கி வருகிறார்.  குறிப்பாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது தான் செல்லும் இடங்களில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். 

இதனால், இன்ஸ்டாகிராமில் விராட் கோலியை கோடிக்கணக்கானோர் பின் தொடர்கின்றனர். இந்த எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து தற்போது, 50 (5 கோடி) மில்லியன் ஆக உள்ளது. இதன் மூலம்,  இன்ஸ்டாகிராமில் 5 கோடி பின் தொடர்பவர்களை பெற்ற முதல் இந்திய பிரபலம் என்ற பெருமையை விராட் கோலி பெற்றார்.  31  வயதான விராட் கோலி, இன்ஸ்டாகிராமில் இதுவரை 930 புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். 

ஒட்டுமொத்தமாக இன்ஸ்டாகிராமில் அதிக பின் தொடர்பவர்களை கொண்டவராக  கால்பந்து நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனோல்டா விளங்குகிறார். போர்ச்சுகல் நாட்டை சேர்ந்த ரோனோல்டா 200 மில்லியன் (20 கோடி) பின் தொடர்பவர்களை (பாலோயர்ஸ்) பெற்றுள்ளார். 

இந்திய அளவில் விராட் கோலிக்கு அடுத்த இடத்தில் , பாலிவுட் நட்சத்திரம் பிரியங்கா சோப்ரா (49.9 மில்லியன்) உள்ளார். 3  வது இடத்தில் தீபிகா படுகோனே (44.1 மில்லியன்கள்) உள்ளார். 

Next Story