கிரிக்கெட்

இரு நாடுகளும் வெங்காயம்,தக்காளி வர்த்தகம் செய்ய முடியும் என்றால் ஏன் கிரிக்கெட் விளையாடக்கூடாது -சோயிப் அக்தர் + "||" + Can trade onion, tomatoes then why not play cricket Shoaib Akhtar on India-Pakistan bilateral series

இரு நாடுகளும் வெங்காயம்,தக்காளி வர்த்தகம் செய்ய முடியும் என்றால் ஏன் கிரிக்கெட் விளையாடக்கூடாது -சோயிப் அக்தர்

இரு நாடுகளும் வெங்காயம்,தக்காளி வர்த்தகம் செய்ய முடியும் என்றால் ஏன் கிரிக்கெட் விளையாடக்கூடாது -சோயிப் அக்தர்
இரு நாடுகளும் வெங்காயம், தக்காளி வர்த்தகம் செய்ய முடியும் என்றால் , ஏன் கிரிக்கெட் விளையாடக்கூடாது இருதரப்பு கிரிக்கெட் போட்டி குறித்து சோயிப் அக்தர் கேள்வி எழுப்பி உள்ளார்.
இஸ்லாமாபாத்

இந்தியா-பாகிஸ்தான் இருதரப்பு கிரிக்கெட் தொடர் கடைசியாக  நடந்தது 2012-13ல் பாகிஸ்தான் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்காக இந்தியா வந்தது. அதுவும் 5 வருட இடைவெளிக்குப் பிறகு. இந்த இரு நாடுகளும் கடைசியாக ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடியது 2007 ல் தான். இருப்பினும், இரு நாடுகளும் ஐ.சி.சி போட்டிகளிலும் ஆசிய கோப்பைகளிலும் தவறாமல் ஒருவரை ஒருவர் எதிர்கொண்டு வருகின்றன.

இந்த நிலையில் பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் உறவுகளை மீண்டும் தொடங்க வேண்டும் என கூறி உள்ளார். 

இது குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில் கூறி இருப்பதாவது:-

நாம் டேவிஸ் கோப்பை விளையாடலாம், ஒருவருக்கொருவர் கபடி விளையாடலாம், பின்னர் கிரிக்கெட் விளையாடுவதில்  என்ன தவறு?  இந்தியா பாகிஸ்தானுக்கு வர முடியாது, பாகிஸ்தானுக்கு இந்தியா செல்ல முடியாது என்று எனக்கு புரிகிறது, ஆனால் நாம் நடுநிலை இடங்களில் ஆசியா கோப்பை,  சாம்பியன்ஸ் டிராபி விளையாடுகிறோம், இருதரப்பு தொடர்களுக்கும் இதைச் செய்ய முடியவில்லையா? 

நாம் உலகின் மிகச் சிறந்த விருந்தோம்பல் நாடுகளில் ஒன்றாகும், இந்தியா அதை முதலில் பார்த்து உள்ளது. வீரேந்தர் சேவாக், சவுரவ் கங்குலி மற்றும் சச்சின் தெண்டுல்கர் போன்றவர்களிடம் கேளுங்கள்.

நமக்கிடையிலான வேறுபாடுகளால் கிரிக்கெட் பாதிக்கப்படக்கூடாது. இந்தியாவும் பாகிஸ்தானும் விரைவில் இருதரப்பு தொடரை விளையாட முடியும் என்று நம்புகிறோம், இரு நாடுகளுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவுவது முக்கியம்.

பாகிஸ்தான் பயணம் செய்ய மிகவும் பாதுகாப்பான இடம். இந்தியாவின் கபடி அணி வந்தது, அவர்களுக்கு நிறைய  அன்பு கிடைத்தது, வங்காள தேச அணி  டெஸ்ட் கிரிக்கெட் விளையாட வந்தது. ஆனால் இன்னும் சந்தேகங்கள் இருந்தால் நடுநிலை இடங்களை நான் பரிந்துரைக்கிறேன்.

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் கிரிக்கெட் விளையாட முடியாவிட்டால் அனைத்து உறவுகளும் துண்டிக்கப்பட வேண்டும்.

நீங்கள் உறவுகளை துண்டிக்க விரும்பினால், வர்த்தகத்தை நிறுத்துங்கள், கபடி விளையாடுவதை நிறுத்துங்கள். ஏன் கிரிக்கெட் மட்டும்? அது கிரிக்கெட்டாக இருக்கும் போதெல்லாம் நாம்  அதை அரசியல் ஆக்குகிறோம், இது மிகவும் ஏமாற்றமளிக்கிறது. நாம் வெங்காயம் மற்றும் தக்காளி சாப்பிடுகிறோம், நாம்  இனிப்புகளை பரிமாறிக்கொள்கிறோம், பிறகு ஏன் கிரிக்கெட் விளையாட முடியாது?

இந்தியாவும் பாகிஸ்தானும் விளையாடுவது மிகவும் முக்கியமானது,.ஏனெனில் அது வருவாயை கொடுக்கிறது.  அது ஊக்கமளிக்கிறது. அழுத்தத்தைக் கையாளக்கூடிய புதிய வீரர்களைப் நாம் பார்க்கிறோம். அனைவரும் முன்வந்து இந்தியா-பாகிஸ்தான் இருதரப்பு தொடர்களை சாத்தியமாக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என கூறினார்.


தொடர்புடைய செய்திகள்

1. இங்கிலாந்துடனான முதல் டெஸ்ட்: பாகிஸ்தான் வீரர் பாபர் அசாமுக்கு பாராட்டு
இங்கிலாந்துடனான முதல் டெஸ்ட்டில் சிறப்பாக விளையாடிய வீரர் பாகிஸ்தான் வபாபர் அசாமுக்கு பாராட்டு கிடைத்துள்ளது.
2. இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி!
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி பெற்றது.
3. அக்தர் பந்தை எதிர்கொள்ள தெண்டுல்கர் பயப்படுவார், ஆனால் அவர் அதை ஏற்க மாட்டார் - அப்ரிடி
சோயிப் அக்தர் பந்தை எதிர்கொள்ள சச்சின் தெண்டுல்கர் பயப்படுவார், ஆனால் அவர் அதை ஏற்க மாட்டார் என்று ஷாகித் அப்ரிடி கூறி உள்ளார்.
4. பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் என் கழுத்தில் கத்தியை வைத்தார் முன்னாள் பயிற்சியாளர் அதிர்ச்சி தகவல்
பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் யூனிஸ் கான் என் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டினார் என பாகிஸ்தானின் முன்னாள் பேட்டிங் பயிற்சியாளர் கிராண்ட் பிளவர் அதிர்ச்சியூட்டும் தகவலை தெரிவித்து உள்ளார்.
5. தோனி இல்லை என்றால் கோலியின் கிரிக்கெட் வாழ்க்கை அன்றே முடிந்திருக்கும்- கவுதம் காம்பீர் பரபரப்பு தகவல்
தோனி மட்டும் அன்று கோலியை பாதுகாக்காமல் இருந்திருந்தால், கோலியின் கிரிக்கெட் வாழ்க்கை முடிந்திருக்கும் என கவுதம் காம்பீர் தெரிவித்து உள்ளார்.