20 ஓவர் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் ஐ.சி.சி. புதிய திட்டம்


20 ஓவர் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் ஐ.சி.சி. புதிய திட்டம்
x
தினத்தந்தி 18 Feb 2020 10:00 PM GMT (Updated: 18 Feb 2020 8:35 PM GMT)

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) சார்பில் 2023-ம் ஆண்டு முதல் 2031-ம் ஆண்டு வரை நடத்தப்படும் உலக அளவிலான போட்டிகளின் பரிந்துரை பட்டியல் வெளியாகியுள்ளது.

துபாய்,

 இதில் டாப்-10 அணிகள் மட்டுமே பங்கேற்கும் 20 ஓவர் சாம்பியன்ஸ் கோப்பை என்ற புதிய வகை போட்டியை 2024 மற்றும் 2028-ம் ஆண்டுகளில் நடத்த ஐ.சி.சி. திட்டமிட்டு இருப்பது தெரியவந்துள்ளது. இதே போல் புதிய முயற்சியாக முன்னணி 6 அணிகள் கலந்து கொள்ளும் ஒரு நாள் போட்டி சாம்பியன்ஸ் கோப்பை தொடரை 2025 மற்றும் 2029-ம் ஆண்டுகளில் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.

20 ஓவர் உலக கோப்பை 2026 மற்றும் 2030-ம் ஆண்டுகளிலும், 50 ஓவர் உலக கோப்பை போட்டி 2027 மற்றும் 2031-ம் ஆண்டுகளிலும் நடத்தப்படுகிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பும் இந்த வருங்கால போட்டி அட்டவணையில் இடம் பெற்றுள்ளது.

கூடுதலாக பெரிய போட்டிகளை நடத்தும் ஐ.சி.சி.யின் முடிவால் இந்திய கிரிக்கெட் வாரியம் கடும் அதிருப்தி அடைந்துள்ளது. இதனால் இரு நாட்டு தொடர்களை நடத்துவதில் பாதிப்பு ஏற்படும் என்று கூறியுள்ள இந்திய கிரிக்கெட் வாரியம், அடுத்த மாதம் நடக்கும் ஐ.சி.சி. கூட்டத்தில் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story