கிரிக்கெட்

‘கோலியின் விக்கெட்டை வீழ்த்தும் ஆவலில் உள்ளேன்’ நியூசிலாந்து பவுலர் டிரென்ட் பவுல்ட் பேட்டி + "||" + Kohli wicket New Zealand Bowler Interview with Trent Boult

‘கோலியின் விக்கெட்டை வீழ்த்தும் ஆவலில் உள்ளேன்’ நியூசிலாந்து பவுலர் டிரென்ட் பவுல்ட் பேட்டி

‘கோலியின் விக்கெட்டை வீழ்த்தும் ஆவலில் உள்ளேன்’ நியூசிலாந்து பவுலர் டிரென்ட் பவுல்ட் பேட்டி
கையில் ஏற்பட்ட காயம் காரணமாக 6 வாரங்கள் ஓய்வில் இருந்த நியூசிலாந்து இடக்கை வேகப்பந்து வீச்சாளர் டிரென்ட் பவுல்ட் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஆடும் நியூசிலாந்து அணியில் இடம் பிடித்துள்ளார்.
வெலிங்டன்,

முதலாவது டெஸ்ட் நாளை மறுதினம் தொடங்க உள்ள நிலையில் அவர் இந்திய கேப்டன் விராட் கோலிக்கு சவால் விடுத்துள்ளார். இது குறித்து டிரென்ட் பவுல்ட் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலி போன்ற வீரர்களின் விக்கெட்டை கைப்பற்றுவதன் மூலம் எனது திறமையை பரிசோதித்துக் கொள்ள முடியும். அத்தகைய வீரர்களுக்கு குடைச்சல் கொடுப்பதற்கு தான் நான் கிரிக்கெட் ஆடுகிறேன். என்னால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. எப்போது களம் கண்டு, கோலியின் விக்கெட்டை வீழ்த்த போகிறேன் என்ற பேராவலுடன் காத்திருக்கிறேன். கோலி அற்புதமான ஒரு வீரர். அவர் எப்படிப்பட்டவர் என்பதை அனைவரும் அறிவர்.


இந்திய அணி சிறந்த வீரர்களை கொண்டுள்ளது. அவர்கள் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளனர். தங்கள் ஆட்டத்தை எப்படி ஆட வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறார்கள். ஆஸ்திரேலிய தொடரில் (0-3 என்ற கணக்கில் தோல்வி) கடினமான பாடம் கற்றுக் கொண்டோம். அந்த சரிவில் இருந்து எழுச்சிப்பெறுவதில் நாங்கள் எந்த நிலையில் இருக்கிறோம் என்பதை பார்க்க வேண்டும். இந்த மைதானத்தில் நான் எப்போதும் உற்சாகமாக அனுபவித்து பந்துவீசி இருக்கிறேன். மீண்டும் களம் காணும் ஏக்கத்துடன் உள்ளேன். இவ்வாறு பவுல்ட் கூறினார்.

30 வயதான பவுல்ட் இதுவரை 65 டெஸ்டில் ஆடி 256 விக்கெட்டுகள் வீழ்த்தியிருக்கிறார்.