ரஞ்சி கிரிக்கெட்டில் கால்இறுதி ஆட்டம் இன்று தொடக்கம்


ரஞ்சி கிரிக்கெட்டில் கால்இறுதி ஆட்டம் இன்று தொடக்கம்
x
தினத்தந்தி 20 Feb 2020 1:33 AM GMT (Updated: 20 Feb 2020 1:33 AM GMT)

ரஞ்சி கிரிக்கெட்டில் கால்இறுதி ஆட்டம் இன்று தொடங்குகிறது.

கட்டாக், 

38 அணிகள் பங்கேற்ற 86-வது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் லீக் சுற்று முடிவில் 8 அணிகள் கால்இறுதிக்கு தகுதி பெற்றது. இன்று பல்வேறு இடங்களில் தொடங்கும் கால்இறுதி ஆட்டங்களில் குஜராத்- கோவா, பெங்கால்-ஒடிசா, கர்நாடகா-ஜம்மு-காஷ்மீர், சவுராஷ்டிரா-ஆந்திரா அணிகள் மோதுகின்றன. 

5 நாட்கள் நடக்கும் இந்த ஆட்டம் காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. சவுராஷ்டிரா அணியில் புஜாரா இல்லாததால் ஷெல்டன் ஜாக்சன் (605 ரன்) மீது எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. பந்து வீச்சில் அந்த அணியில் ஜெய்தேவ் உனட்கட் (51 விக்கெட்) வலு சேர்க்கிறார்.

Next Story