கிரிக்கெட்

கிரிக்கெட்: ராமச்சந்திரா பள்ளி முதலிடம் + "||" + Cricket: Ramachandra School tops the list

கிரிக்கெட்: ராமச்சந்திரா பள்ளி முதலிடம்

கிரிக்கெட்: ராமச்சந்திரா பள்ளி முதலிடம்
கிரிக்கெட் போட்டியில் ராமச்சந்திரா பள்ளி முதலிடம் பிடித்தது.
சென்னை,

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் பெருநகர சென்னை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பள்ளி அணிகளுக்கான கிரிக்கெட் போட்டி (14 வயதுக்கு உட்பட்டோர்) சென்னையில் நடந்தது. இதில் நேற்று நடந்த இறுதிப்போட்டியில் நெல்லை நாடார் மெட்ரிக்குலேசன்-ராமச்சந்திரா பப்ளிக் பள்ளி அணிகள் மோதின. முதலில் ஆடிய நெல்லை நாடார் பள்ளி அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 193 ரன்கள் எடுத்தது. பிரகதீஷ் 68 ரன்னும், சாய் சிம்ஹா ஆட்டம் இழக்காமல் 49 ரன்னும் சேர்த்தனர். ராமச்சந்திரா பள்ளி தரப்பில் அபினவ் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். பின்னர் 194 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய ராமச்சந்திரா பள்ளி அணி 48 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 197 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தனதாக்கியது. அதிகபட்சமாக அபினவ் 78 ரன்னும், சரங்தார் ஆட்டம் இழக்காமல் 68 ரன்னும் எடுத்தனர்.தொடர்புடைய செய்திகள்

1. கிரிக்கெட் விசயத்தில் டோனி ஒருபோதும் பாகுபாடு பார்க்கமாட்டார் - ஆர்.பி.சிங்
கிரிக்கெட் விசயத்தில் முடிவு எடுப்பதில் டோனி ஒருபோதும் பாகுபாடு பார்க்கமாட்டார் என முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஆர்.பி.சிங் தெரிவித்துள்ளார்.
2. கிரிக்கெட் விளையாடிய 20 வாலிபர்களை சுற்றி வளைத்து பிடித்த போலீசார்: கொரோனா பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்
தர்மபுரியில், ஊரடங்கு உத்தரவை மீறி கிரிக்கெட் விளையாடிய 20 வாலிபர்களை சுற்றி வளைத்து பிடித்த போலீசார், அவர்களை கொரோனா பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
3. கிரிக்கெட்டில் மழை பாதிப்பு விதிமுறையை கண்டுபிடித்த லீவிஸ் மரணம்
டக்வொர்த் லீவிஸ் முறையை உருவாக்கியவர்களில் ஒருவரான இங்கிலாந்தை சேர்ந்த டோனி லீவிஸ் நேற்று முன்தினம் மரணம் அடைந்தார்.
4. கிரிக்கெட் மூலம் ரூ.30 லட்சம் கிடைத்தால் போதும் என டோனி கூறினார்: வாசிம் ஜாஃபர்
கிரிக்கெட் மூலம் ரூ.30 லட்சம் கிடைத்தால் போதும் என இந்திய அணிக்கு அறிமுகமான புதிதில் டோனி கூறியிருந்தார் என்று வாசிம் ஜாஃபர் தெரிவித்தார்.
5. ‘கிரிக்கெட்டில் சூதாட்டத்துக்கு வீரர்கள் இடம் அளிக்கக்கூடாது’ - ஷேவாக் வேண்டுகோள்
கிரிக்கெட் போட்டியில் சூதாட்டத்துக்கு இடம் அளிக்காத வகையில் வீரர்கள் செயல்பட வேண்டும் என்று முன்னாள் வீரர் ஷேவாக் வேண்டுகோள் விடுத்துள்ளார்.