கிரிக்கெட்

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட்: இலங்கை அணி ‘திரில்’ வெற்றி + "||" + One-day cricket against West Indies: Sri Lanka win a thrilling match

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட்: இலங்கை அணி ‘திரில்’ வெற்றி

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட்: இலங்கை அணி ‘திரில்’ வெற்றி
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில், இலங்கை அணி ‘திரில்’ வெற்றிபெற்றது.
கொழும்பு,

இலங்கைக்கு சென்றுள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 3 போட்டி கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடுகிறது. இதன் முதலாவது ஒரு நாள் போட்டி கொழும்பில் நேற்று நடந்தது. இதில் முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 7 விக்கெட் இழப்புக்கு 289 ரன்கள் எடுத்தது. தனது 9-வது சதத்தை நிறைவு செய்த ஷாய் ஹோப் 115 ரன்கள் (140 பந்து, 10 பவுண்டரி) விளாசினார். கேப்டன் பொல்லார்ட் 9 ரன்னில் கேட்ச் ஆனார்.


அடுத்து களம் இறங்கிய இலங்கை அணியில் அவிஷ்கா பெர்னாண்டோ (50 ரன்), கேப்டன் கருணாரத்னே (52 ரன்) இருவரும் அரைசதம் அடித்து சூப்பர் தொடக்கம் தந்தனர். அதன் பிறகு சீரான இடைவெளியில் விக்கெட் விழுந்ததால் கடைசி கட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. 8-வது வரிசையில் இறங்கிய ஹசரங்கா டி சில்வா (4 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 42 ரன், நாட்-அவுட்) ஒரு வழியாக தங்கள் அணியை கரைசேர்த்தார். இலங்கை அணி 49.1 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 290 ரன்கள் குவித்து ஒரு விக்கெட் வித்தியாசத்தில் ‘திரில்’ வெற்றியை சுவைத்தது. 2-வது ஒரு நாள் போட்டி 26-ந்தேதி நடக்கிறது.


தொடர்புடைய செய்திகள்

1. ஸ்டெர்லைட்டுக்கு எதிரான உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு: பல்வேறு கட்சித்தலைவர்கள் வரவேற்பு
ஸ்டெர்லைட்டுக்கு எதிரான உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு பல்வேறு கட்சித்தலைவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
2. இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட்: பாகிஸ்தான் அணி திணறல்
இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி திணறி வருகிறது.
3. வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட்: இங்கிலாந்து வீரர்கள் பர்ன்ஸ், போப் அரைசதம்
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வீரர்கள் பர்ன்ஸ், போப் அரைசதம் அடித்தனர்.
4. இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட்: வெஸ்ட் இண்டீஸ் அணி அபார வெற்றி
இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்டில் வெஸ்ட் இண்டீஸ் அணி அபார வெற்றி பெற்றது.
5. இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட்: வெஸ்ட் இண்டீஸ் அணி முன்னிலை
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதலாவது டெஸ்டில் வெஸ்ட் இண்டீஸ் அணி 318 ரன்களுக்கு ஆட்டம் இழந்து 114 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

ஆசிரியரின் தேர்வுகள்...