கிரிக்கெட்

இந்தியா - நியூசிலாந்து முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி: நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 348 ரன்களில் “ஆல் அவுட்” + "||" + India vs New Zealand first test; day 3: New Zealand are 348/10 in their first innings

இந்தியா - நியூசிலாந்து முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி: நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 348 ரன்களில் “ஆல் அவுட்”

இந்தியா - நியூசிலாந்து முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி: நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 348 ரன்களில் “ஆல் அவுட்”
இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 348 ரன்களில் “ஆல் அவுட்” ஆனது.
வெலிங்டன், 

இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வெலிங்டனில்  நடைபெற்று வருகிறது. டாஸ் ஜெயித்த நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

இதில் முதலில் பேட் செய்த இந்திய அணி தொடக்க நாளில் 55 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 122 ரன்களுடன் தடுமாறியது. துணை கேப்டன் அஜிங்யா ரஹானே 38 ரன்னுடனும், விக்கெட் கீப்பர் ரிஷாப் பண்ட் 10 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். மழையால் முதல் நாளில் 35 ஓவர்கள் இழப்பு ஏற்பட்டது.

2-வது நாளான நேற்று இந்திய வீரர்கள் தொடர்ந்து பேட்டிங் செய்தனர். தொடர்ந்து நியூசிலாந்து அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் இந்திய வீரர்கள் தங்களது விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.

முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 68.1 ஓவர்களில் 165 ரன்களில் ஆல்-அவுட் ஆனது. முதல் இன்னிங்சில் விராட் கோலியின் தலைமையில் இந்திய அணி பெற்ற 3-வது மோசமான ஸ்கோர் இதுவாகும். நியூசிலாந்து தரப்பில் புதுமுக வீரர் கைல் ஜாமிசன், டிம் சவுதி ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் டாம் லாதம் (11 ரன்), டாம் பிளன்டெல் (30 ரன்) இருவரையும் வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் ஷர்மா வெளியேற்றினார். இதைத் தொடர்ந்து கேப்டன் கேன் வில்லியம்சனும், தனது 100-வது டெஸ்டில் ஆடும் ராஸ் டெய்லரும் கைகோர்த்து அணிக்கு வலு சேர்த்தனர்.

ராஸ் டெய்லர் 44 ரன்களில் (71 பந்து, 6 பவுண்டரி, ஒரு சிக்சர்), இஷாந்த் ஷர்மாவின் பந்தில் வீழ்ந்தார். இந்த ஜோடி 3-வது விக்கெட்டுக்கு 93 ரன்கள் சேர்த்தது.

சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட வில்லியம்சன் 89 ரன்களில் முகமது ஷமி வீசிய பந்தை அடித்த போது, ‘கவர்’ திசையில் நின்ற மாற்று பீல்டர் ஜடேஜா பாய்ந்து விழுந்து பிரமாதமாக கேட்ச் செய்தார். அடுத்து வந்த ஹென்றி நிகோல்ஸ் (17 ரன்) அஸ்வினின் சுழற்பந்து வீச்சில் பக்கத்தில் நின்ற கோலியிடம் பிடிபட்டார்.

நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 71.1 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 216 ரன்கள் எடுத்த நிலையில், போதிய வெளிச்சம் இல்லாததால் ஆட்டம் முன்கூட்டியே முடித்துக் கொள்ளப்பட்டது. விக்கெட் கீப்பர் வாட்லிங் 14 ரன்னுடனும், கிரான்ட்ஹோம் 4 ரன்னுடனும் அவுட் ஆகாமல் உள்ளனர்.

இந்நிலையில், மூன்றாம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. கிராண்ட்ஹோம் 43 ரன்னில் அவுட்டானார். கடைசி கட்ட வீரர்கள் அதிரடியாக ஆடினர். ஜாமிசன் 44 ரன்னும், போல்ட் 38 ரன்னும் எடுத்தனர்.

இறுதியில், நியூசிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் 348 ரன்கள் குவித்துள்ளது. இதன்மூலம் நியூசிலாந்து அணி இந்திய அணியை விட 183 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. 

இந்தியா சார்பில் இஷாந்த் சர்மா 5 விக்கெட்டும், அஸ்வின் 3 விக்கெட்டும், பும்ரா, ஷமி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.