ஜிம்பாப்வேக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்டில் வங்காளதேச அணி 560 ரன்கள் குவிப்பு


ஜிம்பாப்வேக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்டில் வங்காளதேச அணி 560 ரன்கள் குவிப்பு
x

ஜிம்பாப்வேக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்டில் வங்காளதேச அணி 560 ரன்கள் குவித்தது. அந்த அணியின் சார்பில் முஷ்பிகுர் ரஹிம் இரட்டை சதம் அடித்தார்.

டாக்கா,

வங்காளதேசம்-ஜிம்பாப்வே அணிகள் இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டாக்காவில் நடந்து வருகிறது. இதில் முதலில் ஆடிய ஜிம்பாப்வே அணி முதல் இன்னிங்சில் 265 ரன்னில் ‘ஆல்-அவுட்’ ஆனது. பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய வங்காளதேச அணி 2-வது நாள் ஆட்டம் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 240 ரன்கள் எடுத்து இருந்தது. கேப்டன் மொமினுல் ஹக் 79 ரன்னுடனும், முஷ்பிகுர் ரஹிம் 32 ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர். நேற்று 3-வது நாள் ஆட்டம் நடந்தது. தொடர்ந்து ஆடிய மொமினுல் ஹக் 132 ரன்னில் ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த முகமது மிதுன் 17 ரன்னிலும், லிட்டான் தாஸ் 53 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். வங்காளதேச அணி முதல் இன்னிங்சில் 154 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 560 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. 3-வது இரட்டை சதம் அடித்த முஷ்பிகுர் ரஹிம் 203 ரன்னும், தைஜூல் இஸ்லாம் 14 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

295 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கிய ஜிம்பாப்வே அணி நேற்றைய ஆட்ட நேரம் முடிவில் 5 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 9 ரன்கள் எடுத்தது. இன்று 4-வது நாள் ஆட்டம் நடக்கிறது.


Next Story