கிரிக்கெட்

‘இந்திய அணி குறைந்த ரன்னில் சரண் அடைந்தது ஆச்சரியம் அளித்தது’ -கேரி ஸ்டீட் + "||" + Indian team Run low Surprised was Gary Steed

‘இந்திய அணி குறைந்த ரன்னில் சரண் அடைந்தது ஆச்சரியம் அளித்தது’ -கேரி ஸ்டீட்

‘இந்திய அணி குறைந்த ரன்னில் சரண் அடைந்தது ஆச்சரியம் அளித்தது’ -கேரி ஸ்டீட்
இந்திய அணி இரண்டு இன்னிங்சிலும் குறைந்த ஸ்கோரில் (165 ரன் மற்றும் 191 ரன்) சுருண்டது எனக்கே கொஞ்சம் ஆச்சரியமாகத் தான் இருந்தது.
நியூசிலாந்து அணியின் தலைமை பயிற்சியாளர் கேரி ஸ்டீட் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:-

நாங்கள் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு இடைவிடாது நீண்ட நேரம் நெருக்கடி கொடுத்ததே அதற்கு காரணம். உள்ளூர் சூழலில் டிம் சவுதி, டிரென்ட் பவுல்ட் ஆகியோரின் பந்து வீச்சு அபாரமாக இருந்தது. குறிப்பாக 8 வார ஓய்வுக்கு பிறகு புத்துணர்ச்சியுடன் களம் திரும்பிய பவுல்ட்டின் பந்துவீச்சில் ‘பொறி’ பறந்தது. உலகின் வேறு எந்த இடத்தையும் விட நியூசிலாந்தில் விளையாடுவது தான் கடினம் என்பதை எல்லா அணிகளும் நினைக்க வேண்டும் என்று விரும்புகிறோம். அது தான் எங்களுக்கு பெருமையாகும்.


அடுத்த டெஸ்டில் இந்திய பேட்ஸ்மேன்கள் ஆதிக்கம் செலுத்த முயற்சிப்பார்கள் என்று எதிர்பார்க்கிறோம். தரம் வாய்ந்த வீரர்களை கொண்டுள்ள இந்திய அணி பதிலடி கொடுக்க தீவிரம் காட்டும். இது தான் எங்களது பந்து வீச்சாளர்களுக்கு சவாலான விஷயமாக இருக்கும்.

குழந்தை பிறந்ததால் முதலாவது டெஸ்டில் ஆடாத வேகப்பந்து வீச்சாளர் நீல் வாக்னர் அணிக்கு திரும்பும் போது, யாரை சேர்ப்பது, யாரை நீக்குவது என்ற தர்மசங்கடம் ஏற்படும். நீல் வாக்னர் வரும் போது நிச்சயம் ஆடும் லெவன் அணியில் இடம் பெறுவார். அதே சமயம் அறிமுக வீரராக இறங்கிய கைல் ஜாமிசனும் முதலாவது டெஸ்டில் பிரமாதப்படுத்தி விட்டார்.

எனவே 2-வது டெஸ்டில் பிரதான சுழற்பந்து வீச்சாளர் இன்றி 4 வேகப்பந்து வீச்சாளர்களுடன் இறங்குவது குறித்து பரிசீலிப்போம். இவ்வாறு கேரி ஸ்டீட் கூறினார்.

இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வருகிற 29-ந்தேதி கிறைஸ்ட்சர்ச்சில் தொடங்குகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. ‘இந்திய அணியின் பயிற்சி முகாமை பெங்களூருவில் இருந்து மாற்ற முடியாது’ - ஆக்கி இந்தியா அறிவிப்பு
கொரோனா பாதிப்பால் ‘சாய்’ சமையல்காரர் மரணம் அடைந்தாலும் இந்திய ஆக்கி அணியின் பயிற்சி முகாமை பெங்களூருவில் இருந்து மாற்ற முடியாது என்று ஆக்கி இந்தியா அமைப்பு அறிவித்துள்ளது.
2. இந்திய அணியில் இருந்து சுரேஷ் ரெய்னா ஓரங்கட்டப்பட்டது ஏன்? - முன்னாள் தேர்வு குழு தலைவர் விளக்கம்
இந்திய அணியில் இருந்து சுரேஷ் ரெய்னா ஓரங்கட்டப்பட்டது ஏன்? என்பது குறித்து முன்னாள் தேர்வு குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் விளக்கம் அளித்துள்ளார்.
3. இந்திய அணியில் டோனிக்கு பிடித்தமான வீரராக ரெய்னா இருந்தார் - யுவராஜ்சிங்
இந்திய கிரிக்கெட் அணியில் டோனிக்கு பிடித்தமான வீரராக ரெய்னா இருந்தார் என்று யுவராஜ்சிங் கூறியுள்ளார்.
4. நான் விளையாடிய காலத்தில் இந்திய அணியின் சீனியர் வீரர்கள் மிகவும் ஒழுக்கமாக நடந்து கொண்டனர் - யுவராஜ்சிங் பெருமிதம்
நான் விளையாடிய காலத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் சீனியர் வீரர்கள் மிகவும் ஒழுக்கமாக நடந்து கொண்டனர் என்று முன்னாள் ஆல்-ரவுண்டர் யுவராஜ்சிங் தெரிவித்தார்.
5. இந்திய அணியின் உத்வேகத்தை லாதம் ஆட்டம் பறித்து விட்டது - விராட் கோலி
இந்திய அணியின் உத்வேகத்தை லாதம் ஆட்டம் பறித்து விட்டதாக இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்தார்.