பெண்கள் டி20 கிரிக்கெட் ; நியூசிலாந்துக்கு 134 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி


பெண்கள் டி20 கிரிக்கெட் ; நியூசிலாந்துக்கு 134 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி
x
தினத்தந்தி 27 Feb 2020 5:43 AM GMT (Updated: 27 Feb 2020 5:43 AM GMT)

பெண்கள் டி20 கிரிக்கெட் போட்டியில், நியூசிலாந்துக்கு இந்திய அணி 134 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயம் செய்துள்ளது.

மெல்போர்ன், 

பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது.  இதில்,  குரூப் - ஏ பிரிவில் இன்று நடைபெற்ற  9 வது லீக் ஆட்டத்தில் இந்தியாவும் நியூசிலாந்தும் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்து வீசத்தொடங்கியது. 

இதன்படி, முதலில் பேட்டிங்கை துவங்கிய இந்திய அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 133 ரன்கள் சேர்த்தது.  இதையடுத்து, 134 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி பேட்டிங் செய்து வருகிறது. 

Next Story