கிரிக்கெட்

20 ஓவர் கிரிக்கெட்: லயோலா அணி தென் மண்டல போட்டிக்கு தகுதி + "||" + 20 Over Cricket: Loyola qualifies for the South Zone Tournament

20 ஓவர் கிரிக்கெட்: லயோலா அணி தென் மண்டல போட்டிக்கு தகுதி

20 ஓவர் கிரிக்கெட்: லயோலா அணி தென் மண்டல போட்டிக்கு தகுதி
20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் லயோலா அணி, தென் மண்டல போட்டிக்கு தகுதிபெற்றது.
சென்னை,

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் பங்கேற்று வரும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் ரெட்புல் இந்தியா நிறுவனம் சார்பில் கல்லூரி அணிகளுக்கான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு இந்தியாவில் 34 நகரங்களில் நடத்தப்படுகிறது. இதில் தென் மண்டலத்துக்கு உட்பட்ட 7 நகரங்களில் ஒன்றான சென்னை மாநகர கல்லூரி அணிகளுக்கான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சென்னையில் நடந்தது. இதன் இறுதிப்போட்டியில் லயோலா-எஸ்.ஆர்.எம். கல்லூரி அணிகள் மோதின. முதலில் ஆடிய எஸ்.ஆர்.எம்.அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 143 ரன்கள் எடுத்தது.


பின்னர் ஆடிய லயோலா அணி 18.5 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 147 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதலிடம் பிடித்தது. இதன் மூலம் தென் மண்டலத்தில் மற்ற நகரங்களில் நடந்த போட்டியில் முதலிடம் பிடித்த அணிகளுடன் விளையாட லயோலா கல்லூரி அணி தகுதி பெற்றுள்ளது. தென் மண்டல போட்டியில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் தேசிய போட்டிக்கு முன்னேறும்.