கிரிக்கெட்

நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் ; இந்திய அணி நிதான ஆட்டம் + "||" + Shaw falls after promising fifty

நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் ; இந்திய அணி நிதான ஆட்டம்

நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் ; இந்திய அணி நிதான ஆட்டம்
நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.
கிறைஸ்ட்சர்ச்,

நியூசிலாந்துக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 20 ஓவர் தொடரை 5-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. ஒரு நாள் தொடரை 0-3 என்ற கணக்கில் பறிகொடுத்தது. அடுத்ததாக இவ்விரு அணிகள் இடையே 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடர் நடந்து வருகிறது. இதில் வெலிங்டனில் நடந்த முதலாவது டெஸ்டில் நியூசிலாந்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இரு அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதன்படி, இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. இந்திய அணி உணவு இடைவேளை வரை 23 ஓவர்களின் போது 2 விக்கெட் இழப்புக்கு 85  ரன்கள் சேர்த்து விளையாடி வருகிறது.   
புஜாரா  15 ரன்களுடனும்  விராட் கோலி 3 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். 

துவக்க ஆட்டக்காரர்களான  பிரித்விஷா (54 ரன்கள்), மயங்க் அகர்வால் (15 ரன்கள்) ஆகியோர்  ஏமாற்றம் அளித்தனர். முன்னதாக மழை காரணமாக ஆட்டம் துவங்குவதில் தாமதம் ஏற்பட்டது. 

தொடர்புடைய செய்திகள்

1. 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்காக விளையாட தயார் - ஹர்பஜன்சிங் விருப்பம்
20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்காக விளையாட தயார் என்று ஹர்பஜன்சிங் தெரிவித்துள்ளார்.
2. 2 வாரம் இந்திய அணி தனிமைப்படுத்திக் கொள்ள தயார்: கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு
ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் விளையாட செல்லும் போது அங்கு 2 வாரங்கள் தனிமைப்படுத்திக் கொள்ள இந்திய அணி தயாராக இருப்பதாக இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
3. ஓராண்டாக விளையாடாத டோனியை இந்திய அணிக்கு எப்படி தேர்வு செய்ய முடியும்? - கவுதம் கம்பீர் கேள்வி
ஓராண்டாக விளையாடாத டோனியை எந்த அடிப்படையில் இந்திய அணிக்கு மீண்டும் தேர்வு செய்ய முடியும் என்று இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் கம்பீர் கேள்வி எழுப்பியுள்ளார்.
4. நியூசிலாந்து மசூதி துப்பாக்கிச்சூடு - பயங்கரவாதி குற்றத்தை ஒப்புக்கொண்டார்
நியூசிலாந்து மசூதிகளில் துப்பாக்கிச்சூடு நடத்திய பயங்கரவாதி குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
5. நியூசிலாந்தில் இனி கருக்கலைப்பு குற்றம் அல்ல - நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேறியது
நியூசிலாந்தில் குற்றவியல் சட்டத்தில் இருந்து, கருக்கலைப்பு குற்றம் என்று கூறப்பட்ட பிரிவை நீக்கும் மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.