இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடர்: தென்ஆப்பிரிக்க அணி அறிவிப்பு


இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடர்: தென்ஆப்பிரிக்க அணி அறிவிப்பு
x
தினத்தந்தி 3 March 2020 12:11 AM GMT (Updated: 3 March 2020 12:11 AM GMT)

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான, தென்ஆப்பிரிக்க அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜோகன்னஸ்பர்க்,

குயின்டான் டி காக் தலைமையிலான தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி, இந்த மாதத்தில் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் விளையாடுகிறது. இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி தர்மசாலாவில் வருகிற 12-ந் தேதியும், 2-வது ஒருநாள் போட்டி லக்னோவில் வருகிற 15-ந் தேதியும், 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி கொல்கத்தாவில் வருகிற 18-ந் தேதியும் நடக்கிறது. இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடருக்கான தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இடக்கை சுழற்பந்து வீச்சாளர் ஜார்ஜ் லின்ட் ஒருநாள் போட்டியில் அறிமுக வீரராக இடம் பிடித்துள்ளார்.

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடருக்கான தென்ஆப்பிரிக்க அணி வருமாறு:- குயின்டான் டி காக் (கேப்டன்), தெம்பா பவுமா, வான்டெர் துஸ்சென், பாப் டுபிளிஸ்சிஸ், கைல் வெர்ரின், ஹென்ரிச் கிளாசென், டேவிட் மில்லர், ஜோன் ஸ்முட்ஸ், பெலக்வாயோ, நிகிடி, லுதோ சிபம்லா, பியூரன் ஹென்ரிக்ஸ், அன்ரிச் நோட்ஜே, ஜார்ஜ் லின்ட், கேசவ் மகராஜ்.

Next Story