20 ஓவர் கிரிக்கெட்: இலங்கையை வீழ்த்தியது வெஸ்ட் இண்டீஸ் - 500-வது ஆட்டத்தில் விளையாடி பொல்லார்ட் சாதனை


20 ஓவர் கிரிக்கெட்: இலங்கையை வீழ்த்தியது வெஸ்ட் இண்டீஸ் - 500-வது ஆட்டத்தில் விளையாடி பொல்லார்ட் சாதனை
x
தினத்தந்தி 5 March 2020 12:54 AM GMT (Updated: 5 March 2020 12:54 AM GMT)

20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இலங்கையை வீழ்த்தியது வெஸ்ட் இண்டீஸ் அணி , 500-வது ஆட்டத்தில் விளையாடி பொல்லார்ட் சாதனை படைத்துள்ளார்.

பல்லகெலே, 

இலங்கை-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி பல்லகெலேவில் நேற்று நடந்தது. முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 4 விக்கெட்டுக்கு 196 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக லென்டில் சிமோன்ஸ் 67 ரன்கள் எடுத்தார். வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் கீரன் பொல்லார்ட்டுக்கு ஒட்டுமொத்த 20 ஓவர் கிரிக்கெட்டில் (உள்ளூர், லீக் மற்றும் சர்வதேசம் உள்பட) இது 500-வது ஆட்டமாகும். இந்த மைல்கல்லை எட்டிய முதல் வீரரான பொல்லார்ட் இந்த ஆட்டத்தில் 34 ரன்கள் விளாசினார்.

அடுத்து களம் இறங்கிய இலங்கை அணி 19.1 ஓவர்களில் 171 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதன் மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வேகப்பந்து வீச்சாளர் ஒஷானே தாமஸ் 5 விக்கெட்டுகளை சாய்த்தார். இவ்விரு அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி இதே மைதானத்தில் நாளை நடக்கிறது.

Next Story